Baakiyalakshmi Serial: பாக்யாவை கணவர் ரூமில் தங்க சொல்லும் மாமியார்..! விழிபிதுங்கி நிற்கும் கோபி..!
பாக்ய லட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக இருக்கிறது.
அந்த ப்ரோமோவில், “ கோபியின் அம்மாவான ஈஸ்வரி பாக்கிய லட்சுமியை கோபியின் ரூமில் தங்கச் சொல்கிறார். இதைக்கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்க, ஈஸ்வரி இனி பாக்ய லட்சுமி இனி உன் ரூமில் தங்குவாள் என்று கூறுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எழிலும், தாத்தாவும் சிரிக்க, கோபி என்ன செய்வதென்று தெரியால் விழி பிதுங்கி நிற்கிறார்.
தொடர்ந்து பேசும் அவர், பாக்யா ரூமில் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள் எனக் கூறி பாக்யாவை தன் ரூமில் தங்குவதை தவிர்க்க முயல்கிறார். இதைக்கேட்ட பாக்யா,நான் ஹாலிலே படுத்துக்கொள்கிறேன் என்கிறார். ஆனால் இதைக்கேட்ட ஈஸ்வரி, இல்லை நீ அங்குதான் தங்க வேண்டும் என்று கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர் நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர். முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார். இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார்.
View this post on Instagram
சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார்.சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்