Baakiyalakshmi Serial: கட்டுப்பாட்டை இழந்த லாரி..! நசுங்கிய கார்...! விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ‘பாக்கியலஷ்மி’ சீரியல் நடிகைகள்!
மிலா தனது நெருங்கிய தோழிகளான ‘பாக்கியலட்சுமி’ புகழ் நடிகை திவ்யா கணேஷ் மற்றும் கம்பம் மீனா ஆகியோருடன் படப்பிடிப்புக்காக குமுளிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்கள்.
நடிகை ஷகீலாவின் மகள் மிலா மற்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை திவ்யா கணேஷ் ஆகியோர் கார் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தால் சின்னத்திரையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தென்னிந்திய திரையுலகத்தை தனது அல்ட்ரா கிளாமர் படங்களின் மூலம் ஆட்சி செய்த நடிகை ஷகீலா. இவர், சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ மூலம் தனது மறுபிரவேசத்தை தொடங்கினார். அவர் திருநங்கையான தனது வளர்ப்பு மகள் மிலாவை அறிமுகப்படுத்தியபோது ரசிகர்கள் நெகிழ்ந்தனர். அவரை ஒரு மாடல் அம்மா என்று பாராட்டினர்.
இந்த நிலையில், மிலா தனது நெருங்கிய தோழிகளான ‘பாக்கியலட்சுமி’ புகழ் நடிகை திவ்யா கணேஷ் மற்றும் கம்பம் மீனா ஆகியோருடன் படப்பிடிப்புக்காக குமுளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வழியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்னால் வந்து கார் மீது மோதியது. இதில், அனைவரும் காயமின்றி தப்பினர். கார் மட்டும் சேதமடைந்தது. விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெய்வீக அருளால் அவரும் அவரது நண்பர்களும் காயமின்றி தப்பியதாக சமூக வலைதளத்தில் மிலா கூறியுள்ளார். தனக்கு முதுகில் ஒரு சிறிய ரத்த உறைவு இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மூவரும் தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதில் நடித்தவர்களுக்கு விபத்து என தெரிந்ததும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் சிக்கிய மூவரும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து, அதனை தங்களின் சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார்கள். சமீபத்தில் கூட இவர்கள் மூவரும் தாங்கள் சுற்றுலா சென்ற இடங்களில் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து சீரியல் குழுவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்