Baakiyalashmi Serial: பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரமோ... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் ...
பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரோமோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அது குறித்துப் பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் பெண்களால் குறிப்பாக திருமணமான பெண்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் ரேட்டிங்கில் எப்போதும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விடும். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல், வழக்கமான கோபி, ராதிகா, பாக்யா இடையேயான மோதல் காட்சிகளால் சற்று தொய்வடைந்தது.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் வெளியாகியுள்ள புரோமோவில், தனது மகன் எழிலிடம் பாக்யா நானும் கல்லூரியில் சேர்ந்திடவா என கேட்கிறார். எழிலும் பாக்யாவின் விருப்பத்திற்கு ஆதரவாக பேசுகிறார். பாக்கியா கல்லூரியில் சேர்ந்த விஷயத்தை இனியா தனது தந்தை கோபியிடம் கூறுகிறார். அதுவும் தன்னுடைய கல்லூரியிலேயே தனது அம்மா சேர்ந்துள்ளார் என்று கூறியவுடன் கோபி பேரதிர்ச்சி அடைகிறார்.
இந்த பிரமோவை பார்த்த ரசிகர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கதையை ஓட்ட தெரியாமல் பாக்யா கல்லூரியில் சேர்வதைப் போல் கதையை கொண்டு செல்வதாகவும் சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா என்ற ஒற்றை பெண்மனியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வெளியுலகம் தெரியாமல் கணவன் குடும்பம் பிள்ளைகள் என வாழ்ந்து வரும் பாக்யா ஒரு கட்டத்தில் கணவன் தன்னை ஏமாற்றியது தெரிய வந்ததும் புயலாக மாறி விடுகிறார். கேட்டரிங் தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பது, ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ் போவது என்று தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். மேலும் தன் குடும்பத்தையும் தாங்கி நிற்கிறார். இப்படி வெளி உலகம் தெரியாத ஒரு வெகுளி பெண் எவ்வாறு வலிமையான பெண்மனியாக மாறுகிறார்? சாதித்துக் காட்டுகிறார் என்பது தான் இந்த சீரியலின் கரு.
இந்த சீரியலின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கதாநாயையை தாண்டி மற்ற கதாப்பாத்திரமும் வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. போரடிக்காத கதை களம். என பல்வேறு அம்சங்கள் இந்த சீரியலின் வெற்றிக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறன.
மேலும் படிக்க,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

