மேலும் அறிய
Advertisement
Ayalaan Trailer: ஹாலிவுட் படத்திற்கு டஃப் கொடுக்கும் அயலான் - ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன சூப்பர் நியூஸ்
Ayalaan Trailer: அயலான் படம் குறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தில் உள்ளது என கூறியுள்ளார்.
Ayalaan Trailer: ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தை அயலான் படம் இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் அயலான் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகிபாபு, கருணாகரன் என பலர் நடித்துள்ளனர். ஏலியன் ஜானரில் உருவான அயலான் படம் நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
படத்தின் டீசர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தி வருகின்றது. அவ்வகையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை படக்குழு எளிமையாக நடத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ர விழாவில் மாரி செல்வராஜ், ஏ.ஆர். ரஹ்மான், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் பெருசா இருக்கும் என சிவகார்த்திகேயன் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதில் பேசிய கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கோட்டபாடி ஜெயம் ராஜேஷ் பேசும் போது தெலுங்குக்கு ஒரு பாகுபலி, கன்னட சினிமாவுக்கு ஒரு கேஜிஎஃப் போல தமிழுக்கு அயலான் இருக்கும் என பேசியிருந்தார்.
"பவுடர் ரத்தத்தை நம்பாம ஏலியன் நம்பி இருக்கோம்"
— SIVAKARTHIKEYAN 24x7™ (@SK__24x7) December 26, 2023
"யார் வந்தாலும் பரவால்ல இது அயலான் பொங்கல்"@kjr_studios speech at the event 🔥🔥🔥#Ayalaan #AyalaanAudioLaunch #AyalaanPreReleaseEvent pic.twitter.com/MrnYdM58Yj
இதேபோல் அயலான் படம் குறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தை அயலான் படம் எட்டியுள்ளது என்றும், அயலான் படத்தில் பிஜிஎம் பணிக்காக தன்னுடைய முயற்சி 5 மடங்காக இருந்தது என்றும், அதற்காக 2 மாதங்களாக உழைத்ததாகவும் கூறியுள்ளார். அயலான் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
#AyalaanAudioLaunch - #ARRahman Speech ✨:
— Sandy (@SMD_Tweets) December 26, 2023
• #Ayalaan achieved the Quality of Hollywood films like Transformers, Fast and Furious and E.T🔥
• The Film required 5 times effort from me. BGM wise !! We are working for the past two months for it. Hope you all like it 🤝 Happy…
மேலும் படிக்க: Sivakarthikeyan: அயலான் படத்துக்கு சம்பளம் வாங்கல.. காரணம் இதுதான்.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த உண்மை!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion