AVM Kumaran on Rishi Kapoor : ரிஷி கபூருக்கே 'நோ' சொன்ன ஏவிஎம்... அவங்க இஷ்டத்துக்கு பண்ண முடியாது - ஏவிஎம் குமரன் உடைத்த உண்மை
AVM Kumaran on Rishi Kapoor : பாலிவுட்டில் ஸ்டார் ஹீரோவாக இருந்த ரிஷி கபூர் கேட்ட நடிகையை ஹீரோயினாக போட முடியாது என ஏவிஎம் நிறுவனம் சொன்னதால் படமே ட்ராப் ஆன கதை சொன்ன ஏவிஎம் குமரன்.
தமிழ் சினிமாவில் காலகாலமாக மிக பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது ஏவிஎம் நிறுவனம். மிகப்பெரிய ஜாம்பவான்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பலர் நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோஸ் என ஒரே கூரையின் அடியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. ஏராளமான பிரமாண்ட படங்களை தயாரித்து அதில் வெற்றியும் அடைந்து பல மடங்கு லாபங்களை சந்தித்துள்ளது ஏவிஎம் நிறுவனம்.
அந்த வகையில் ஏவிஎம் குமரன் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் அன்றைய காலகட்டத்து திரையுலகிற்கும் இன்றைய காலத்து சினிமாவுக்கும் எந்த அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளது என்பது குறித்தும் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் வெளிநாட்டுக்கு சென்று படம் பிடிப்பது என்பது அரிதான ஒரு விஷயம். அப்படி முதன்முறையாக ஏவிஎம் நிறுவனம் வெளிநாட்டுக்கு சென்று பெரிய பட்ஜெட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்தியில் அப்படத்தை எடுப்பதற்காக திரைக்கதை ஒன்றை தயார் செய்து ரிஷி கபூரை அணுகினோம். அப்போதுதான் அவருடைய 'பாபி' படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்று இருந்தது.
எங்களின் படத்தின் கதையை கேட்டதும் ரிஷி குமாரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஜெயசுதாதான் ஹீரோயின் என சொன்னதும் நான் அவரை நேரில் சந்தித்து தனியாக பேச வேண்டும் என சொன்னார். ஒரு மணிநேரம் ஜெயசுதாவுடன் பேசிவிட்டு வெளியில் வந்தார். என்ன பேசினார் என்பது கூட எங்களுக்கு தெரியாது. டேட்ஸ் பற்றி கேட்டதற்கு நான் பாம்பே போனதும் என்னுடைய மேனேஜர் மூலம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என சொல்லிவிட்டார். அங்கு போய் அவரை சந்தித்து பேசினால், முதலில் எனக்கு பிடித்த ஹீரோயினை போடுங்க அப்போ தான் நான் நடிப்பேன் என்றுள்ளார் ரிஷி கபூர்.
எனக்கு தெரிந்த சுலோக்சனா பண்டிட் என்ற பாலிவுட் நடிகை ஒருவர் இருக்கிறார். அவரை எனக்கு ஜோடியாக போட்டால் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார் ரிஷி கபூர். இந்த தகவல் அறிந்த ஏவி மெய்யப்ப செட்டியார் அப்படி அவர் கேட்டதுபோல ஹிந்தி நடிகையை எல்லாம் போட முடியாது. அப்படி அந்த நடிகைதான் வேண்டும் என்றால் நாங்கள் அந்த படத்தை எடுக்கவில்லை. அப்படி ஜெயசுதா வேண்டாம் என்றால் வேறு யாராவது ஒரு தென்னிந்திய நடிகையை வேண்டுமானாலும் போடலாம்.
ஆனால் அவர் சொல்லும் நடிகையை எல்லாம் போட முடியாது என சொல்லப்பட்டது. அப்படியானால் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என கூறிவிட்டாராம் ரிஷி கபூர். அந்த படத்துக்காக வாங்கிய 50 ஆயிரம் பணத்தையும் திருப்பி கொடுக்க முடியாது என கூறிவிட்டாராம். அத்துடன் அந்த படம் ட்ராப் செய்யப்பட்டது.
அப்படித்தான் அன்றைய தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்கள். எவ்வளவு பெரிய நடிகரானாலும், தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் நடிகர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹீரோவின் டேட்ஸ் கிடைத்துவிட்டால் அவர்கள் சொல்பவர்கள் தான் இயக்குநர், ஹீரோயின், இசையமைப்பாளர். அவர்கள் சொல்வதுதான் லொகேஷன். எத்தனை கோடி பணம் போட்டாலும் தயாரிப்பாளர்களால், முதலாளி என்ற அந்த உரிமையை எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் காலத்தின் மாற்றம் என பேசி இருந்தார் ஏவிஎம் குமரன்.