மேலும் அறிய

AVATAR 2: வசூலை வாரிக் குவிக்கும் அவதார் 2.. உலக அளவிலான கலெக்‌ஷன் இத்தனை கோடிகளா?

அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் நல்ல வறவேற்பு பெற்று, உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’.  இதெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் தானா என கண்டுபிடிக்க முடியாத அளவிலான, அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் எடுக்கப்பட்ட அப்படம்,   உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளையும் பெற்றது. 

முன்பதிவில் அமோகம்:

இதனைத் தொடர்ந்து அவதார் படம் 5 பாகங்களாக  2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர்  ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் இந்தியாவில் கடந்த 16ம் தேதி வெளியானது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், ஏறக்குறைய 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 

நல்ல வரவேற்பு:

படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவ அதிகாலை காட்சிகளுக்கே ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ஏற்கனவே பார்த்த அவதார் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் கதைக்களமும், விஷூவல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. தமிழ் டப்பிங் பார்க்க சென்ற மக்களுக்கு சமகாலத்தில் பேசப்படும் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்ததால் கலகலப்பாக அவதார் படம் அமைந்தது. 

இந்தியாவில் வசூலை அள்ளிய அவதார் 2:

இந்நிலையில் அவதார் 2 பாகத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவதார்-2 படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.41 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் படம் முதல் நாளில் ரூ.53.10 கோடியை வசூலித்தது. அதேநேரம், இன்பினிட்டி வார், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்-2, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ஆகிய திரைப்படங்களின் சாதனையை, அவதார் முறியடித்துள்ளது.

ரூ.100 கோடியை கடக்கும் அவதார் 2

ரூ.41 கோடியில் ஆங்கில வெர்ஷனில் ரு.21.7 கோடியும், இந்தியில் ரூ.11.5 கோடியும், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகள் மூலம் ரூ.7.8 கோடியும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று வார விடுமுறை காரணமாக, இந்தியாவில் மட்டும் ரூ.44 முதல் 46 கோடி ரூபாய் வரை வசூல் ஆகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையொட்டி இன்று அவதார் படம் வெளியாகியுள்ள திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளதால், இன்றைய நாளின் முடிவில் இந்தியாவில் மட்டும் அவதார் - 2 திரைப்படத்தின் வசூல் ரூ.130 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்தால், முதல் வார இறுதியில் இப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை கடக்கலாம். கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் வசூல்  ரீதியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் எனும் பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

உலக அளவிலான வசூல்:

இதனிடையே, உலக அளவில் இந்த திரைப்படத்தின் வசூல் இரண்டே நாட்களில் ரூ.1,500 கோடியை கடந்துள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.3, 300 கோடி ஆகும். இதுவரை அதிகபொருட் செலவில் எடுக்கப்பட்ட, பிரமாண்ட திரைப்படம் எனும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது. முதல் வார இறுதியில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.1, 241 கோடியும், உலக அளவில் அதிகபட்சமாக ரூ.4, 550 கோடியும் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget