7 Years Of Aruvi : அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்...7 ஆண்டுகளை கடந்துள்ள அருவி திரைப்படம்
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2016 ஆண்டு வெளியான அருவித் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
அருவி
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அருவித் திரைப்படம் வெளியாகியது. அதிதி பாலன், பிரதீப் ஆண்டனி, கவிதா பாரதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தி நடித்திருந்தனர். பிந்து மாலினி இப்படத்திற்கு இசையமைத்தார். அருவி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
அருவியின் கதை
தந்தையிடம் அதிகம் பாசக் கொடுத்து வளர்க்கப் பட்டவள் அருவி. படத்தின் தொடக்கத்தில் வரும் கொகோட்டி பாடல் ஒரு பெண் குழந்தையை ஒரு ஒட்டுமொத்த ஊரே சேர்ந்து கொஞ்சி வளர்க்கும் உற்சாகத்தை அளிக்கக் கூடியது. தன் சக நண்பர்களிடம் திமிராக இருப்பவள் அருவி. தன் அழகின்மேல் கொஞ்சம் கர்வம் கூட அவளுக்கு உண்டு. எவ்வளவு பாசம் காட்டி வளர்க்கப் படுகிறாளோ அதே அளவிற்கு தன் தந்தையால் தவறாக புரிந்துகொள்ளப் பட்டு வீட்டை விட்டு துறத்தப் படுகிறாள்.
தனது வீட்டை விட்டு வெளியே வரும் அருவி எமிலி என்கிற திருநங்கையின் நட்பை சேர்க்கிறார். அவர் மூலமாக ஒரு வேலை. படத்தின் தொடக்கம் முதல் அருவி ஏன் தன் வீட்டில் இருந்து துரத்தப் படுகிறார். அவருக்கு என்ன நடந்தது என்பது பார்வையாளர்களுக்கு தெரிவதில்லை. இதை எல்லாம் இயக்குநர் படத்தின் இரண்டாம் பாதியில் சொல்கிறார் . தான் நம்பிய மூன்று ஆண்கள் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகவும் நீதி கேட்டு சொல்வதெல்லாம் சத்தியம் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செல்கிறால்.
அருவி படத்தின் மிக சுவாரஸ்யமான பகுதி ஸ்டுடியோவிற்குள் நடக்கும் கதை என்று சொல்லலாம். வெளியில் பார்ப்பதற்கு பார்வையாளர்களை கண் கலங்க வைக்கும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பின் இருக்கும் உண்மையை இந்தப் படம் தத்ரூபமாக காட்டியது. பிரதீப் ஆண்டன் இந்தப் படத்தின் மூலமாம அறிமுகமாகிறார், அருவிக்கு நடந்தது என்ன. தன்னிடம் முறைகேடாக நடந்துகொள்ள முயற்சித்த அந்த ஆண்களுக்கு அவள் என்ன செய்கிறாள் என்பதே மீதிக் கதை.
விமர்சனங்கள்
அருவி திரைப்படம் வெளியாகிய சமயத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரை அருவி மன்னிப்பது தவறான அரசியல் புரிதலை முன்வைப்பதாக இருப்பதாக படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
படத்தின் பிளஸ்
அருவி படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது அந்த படத்தின் பாடல்கள். பிந்து மாலினி இந்தப் படத்திற்கு இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. குறிப்பாக மேற்கு கரையில்., அன்பின் கொடி உள்ளிட்டப் பாடல்கள்.