Mission Release Date: பொங்கல் ரேஸின் இணைந்த அருண் விஜய்... மிஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள நிஷன் திரைப்படம் வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
பொங்கல் ரிலீஸ்
2024 ஆம் ஆண்டு பொங்கலைக் கொண்டாட சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் . ஏலியன் ஃபேண்டஸி படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் , ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்துள்ள லால் சலாம் படம், மற்றும் தனுஷ் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்கள் இந்த பொங்கலன்று வெளியாக இருக்கின்றன. இவைத் தவிர்த்து விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெர் கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த போட்டியில் திடீரென்று இணைந்துள்ளது லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் மிஷன் திரைப்படம்.
மிஷன்
அருன் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தில் எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மதராஸப்பட்டினம், சைவம், தலைவா உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் இந்த் ஆண்டு பொங்கலுக்கு வெள்யாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Mark your calendars! 🗓️ Our 'MISSION' is all set to roll on PONGAL 2024 ☀️🌾 Get ready for an High-octane action extravaganza! 💣💥#MissionChapter1 in cinemas near you from PONGAL 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_… pic.twitter.com/GEPjyMkF76
— Lyca Productions (@LycaProductions) December 24, 2023
மிஷன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முதல் கட்டப் நடைபெற்றது. முதலில் இந்தப் படத்திற்கு அச்சம் என்பது இல்லையே என்று டைட்டில் வைக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் போல் அமைக்கப்பட்டு நடந்தது.
லண்டனில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்.
வெற்றிபெறுவாரா அருண் விஜய்
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ் ஆகிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிடன் படங்களுடம் மோத இருக்கும் அருண் விஜயின் மிஷன் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.