மேலும் அறிய

AR Rahman on Instagram: ’மீசை எப்படி இருக்கு?’ - ஏ.ஆர்.ரஹ்மானின் கலகல போஸ்ட்.. ஷ்ரேயா கோஷலின் ஸ்வீட்..!

தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கலகலப்பான போஸ்ட்களைப் பகிரும் ஏ.ஆர்.ரஹ்மான அண்மையில் ’மீசை வைச்ச குழந்தையப்பா’ என புது கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பார்ப்பதற்கு அமைதியான மனிதர் என்றாலும் அவரது சோஷியல் மீடியா பக்கங்கள் வேறு கதை சொல்லும். தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கலகலப்பான போஸ்ட்களைப் பகிரும் ஏ.ஆர்.ரஹ்மான அண்மையில் ’மீசை வைச்ச குழந்தையப்பா’ என புது கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். Zoom ஆப்பில் இருக்கும் ஒரு ஆப்ஷனைப் பயன்படுத்தி தனக்கு மீசை வைத்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதோடு இந்த கெட்டப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனவும் கேட்டிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

அவரின் போஸ்ட்டுக்கு கலகலப்பான சில கமெண்ட்கள் வந்திருந்தன. புகைப்படத்தில் கமெண்ட் செய்திருந்த பாடகி ஸ்ரேயா கோஷல், ‘இது நிஜமாகவே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

பாடகர் சித் ஸ்ரீராம் தனது கமெண்ட்டில் ‘ஒருநிமிஷம் இது உண்மையான மீசைன்னு நினைச்சிட்டேன்’ எனப் பதிவிட்டிருந்தார். 

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாகச் சினிமாவில் நடிக்கச் சொல்லிக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவரது இசையமைப்பில் மிமி என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. அதன் டைட்டில் சாங் உருவான விதம் குறித்த வீடியோ விரைவில் வெளியிடப்படும் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர்,“ உங்கள் நடிப்பில் வெளியாகும் படத்தை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம் “என கேட்டனர். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “ரொம்ப நாளுக்கு நான் நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறேன் , அதுல உங்களுக்கு விருப்பமில்லையா ?” என  நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கனவே விஜய் ஆண்டனி , ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் நடிகர்கள் அவதாரம் எடுத்து அதிலும் கலக்கி வருகின்றனர்.

ரஹ்மான் திரைக்கதை மற்றும்  தயாரிப்பில் ‘99 சாங்க்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதையாசிரியர் அவதாரம் எடுத்த இவரை நடிகராக பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் இருந்துவரும் நிலையில் இப்படியொரு விளக்கம் அளித்திருக்கிறார் .ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில், விக்ரம் நடிக்கும்  கோப்ரா, மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக ஆக்டிவாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இவரை யாரென்று தெரியாது என கூறிய சம்பவம் மிகப்பெரிய வைரலானது.  ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது.இசையமைப்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் என ஒருவர்  இருக்கிறாராம். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பாரே அவர்தானே அவர்.  ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமல்ல.எங்கள் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. என்.டி.ஆர் குடும்ப கௌரவத்தை ஒப்பிடும் பொழுது, பாரத ரத்னாவே எங்கள் பரம்பரையின் காலடிக்கு சமமானது என ஏளனமாக பேசியிருந்தார் .

இது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பொருத்துக்கொள்ள முடியாத ஏ. ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் பலர் , பாலகிருஷ்ணா என்பவர் யார்?  ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பி அதனை இணையத்தில் டிரெண்டாக்கினர். ஆனால் இதல்லாம் தனக்கு தேவையில்லாத சம்பவம் என்பது போல ஏ.ஆர்.ரஹ்மான் மௌனம் கலைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget