மேலும் அறிய

அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் - வன்னியர் சங்கத் தலைவர்

"வன்னியர்களின் அடையாளமான அக்னிக் கலசம் இடம் பெற்ற வன்னியர் சங்க நாட்காட்டி திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது"

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக படக்குழு அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், காவல் அதிகாரியின் பெயரை அனைத்துக் காட்சிகளிலும் மாற்ற வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இருளர் சமுதாயத்து அப்பாவி இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதையும், அந்த இளைஞரின் மனைவி போராடி நீதி பெற்றதையும் அடிப்படையாக வைத்து 'ஜெய்பீம்' என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்று படக்குழு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. நல்லது.

அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் -  வன்னியர் சங்கத் தலைவர்

மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கானது என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு திரைப்படம், உண்மைகளை மறைத்து பொய்களைக் கட்டமைக்க முயன்றிருப்பதும், தங்களின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிக் கொள்வதற்காக, நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருப்பதும் அருவருக்கத் தக்கவை ஆகும். திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்திற்கும், திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அவை திரைப்படக் குழுவினரின் முகத்திரையைக் கிழித்து அகத்திரையையும், அதில் படிந்து கிடக்கும் அழுக்கு - சகதிகளையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக

கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலை நிறுத்துவதற்காகத் தான் படக்குழு பாடுபட்டிருக்கிறது. அழுக்கு மனதுடனும், வடிகட்டிய வன்மத்துடனும் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞளை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தி படுகொலை செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளரை வன்னியர் என்று காட்டும் நோக்கத்துடன் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் நாட்காட்டி இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர். 

சம்பந்தப்பட்ட ஊரின் ஊராட்சித் தலைவரை சாதிவெறி பிடித்தவரைப் போன்று காட்டியிருக்கின்றனர். கொடூரமான காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர் சங்க நாட்காட்டி இருந்தது அறியாமல் செய்த தவறு என்று ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இயக்குனரின் நாடகத்தை நம்புவதற்கு வன்னியர்கள் ஏமாளிகள் அல்ல. காவல் அதிகாரியின் வீட்டில் தொங்குவது ஏதோ ஒரு நாட்காட்டி அல்ல. அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்ட தேதியைக் காட்டும் வகையில், படப்பிடிப்புக்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி ஆகும். அதில் எதிர்பாராமல் தவறு நடந்து விட்டதாக ஒருவர் கூறினால், அது வடிகட்டிய பொய் என்பதைத் தவிர வேறில்லை. உடல் முழுவதும் வன்மம் பரவியது மட்டுமின்றி, வன்னிய சாதி வெறுப்பு தலைக்கேறிய பிறவிகளுக்குத் தான் யாரோ செய்த கொடுமையை வன்னியர்கள் மீது சுமத்தும் மனநிலை இருக்கும்.

வன்னியர்களின் அடையாளமான அக்னிக் கலசம் இடம் பெற்ற வன்னியர் சங்க நாட்காட்டி திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு காட்சியையும் ஆதாரமாக சுட்டிக்காட்ட முடியும். காவல் அதிகாரி ஒருவரும், வழக்கறிஞரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட கொடூரக் காவல் அதிகாரி உள்ளூரில் சாதி பின்புலம் கொண்டவர் என்று கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஒடுக்கப்பட்ட சமுதாயம் அனுபவித்த கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக படம் எடுப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், தேவையின்றி ஒரு சாதியை, குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்த முயன்றிருப்பதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்; இது குரூர சிந்தனையின் வெளிப்பாடு.

அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் -  வன்னியர் சங்கத் தலைவர்

கலை என்பது அழகு. கலைஞர்கள் அடுத்தவர்களின் மளங்களை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தனி மனிதர் செய்த குற்றத்திற்காக, அதில் எந்த சம்பந்தமுமற்ற இன்னொரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது கலையும் அல்ல... அழகும் அல்ல... மாறாக மிருகங்களை விட கீழான மனநிலையின் கோர வெளிப்பாடு தான். அம்பேத்கரின் அழகியக் குறியீட்டைத் தலைப்பாக வைத்து படம் எடுத்துள்ள ஜெய்பீம் குழுவினர் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவதுடன், வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்துக் காட்சிகளிலும் காவல் அதிகாரியின் பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget