மேலும் அறிய
டோட்டல் டேமேஜ் என்றாலும்... 2 நாளில் எகிறிய அன்னபூரணியின் பேஸ்புக் ஃபாலோவெர்ஸ்!
Annapoorani Amma: இவ்வளவு பஞ்சாயத்திற்கு அப்புறமும், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு அவ்வப்போது ஒரு பதிவு போட்டு, பதிலளித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் அட்மினின் பணி, அலப்பெரியது.
![டோட்டல் டேமேஜ் என்றாலும்... 2 நாளில் எகிறிய அன்னபூரணியின் பேஸ்புக் ஃபாலோவெர்ஸ்! Annapoorani Arasu Amma: Increase in the number of Facebook followers டோட்டல் டேமேஜ் என்றாலும்... 2 நாளில் எகிறிய அன்னபூரணியின் பேஸ்புக் ஃபாலோவெர்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/30/96b78b688f8b772852a43082c57e34a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அன்னபூரணி_அரசு_அம்மாவின்_பேஸ்புக்_பக்கம்_(1)
பெற்ற அம்மாவை மறக்கிறோமோ இல்லையோ, அன்னபூரணி அரசு அம்மாவை(annapoorani arasu amma) யாரும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு, ஆலமரத்தில் அடித்த ஆணியாக, ஒவ்வொரு இதயத்திலும் பதிந்துவிட்ட பெயராகிவிட்டது அன்னபூரணி அரசு அம்மா. கடந்த சனிக்கிழமை வரை, தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆன்மிக அமைப்புகளில், அன்னபூரணி அரசு அம்மாவின் இயற்கை ஒளி பவுண்டேஷனும் ஒன்று. ஆனால், ஞாயிறு பிறந்ததிலிருந்து தமிழ் தெரிந்த ஒவ்வொரு இதயத்தின் அருகிலும் சென்றடைந்தார் அன்னபூரணி.
![டோட்டல் டேமேஜ் என்றாலும்... 2 நாளில் எகிறிய அன்னபூரணியின் பேஸ்புக் ஃபாலோவெர்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/28/e027e1e5ded719df40ce0551026bb13b_original.jpg)
அதுவரை நூற்றுக்கணக்கில் தான் அவரை அறிந்தோர் எண்ணிக்கை இருந்தது. ‛தனக்கான ஒரு உலகம்; தானே அந்த உலகின் ராணி’ என இருந்தவர், தனக்கு என ஒரு பேஸ்புக் பக்கத்தை வைத்துக் கொண்டு, அங்கொன்றுமாய், இங்கொன்றுமாய் எடுத்த வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு, பக்தர் கூட்டத்தை இன்கிரீஸ் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார். அப்போது வரை அவரது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு; ஃபாலோ செய்தவர்கள் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் தான் இருந்தது.
ஆனால், என்று அன்னபூரணி அரசு அம்மா, அவதாரமாக வெளியே வரத் தொடங்கினாரோ, அந்த இரண்டு நாட்களில் அவரை விமர்சித்த அதே அளவிற்கு, அவரை பின் தொடர்வோரும், அவரது பக்கத்தை லைக் செய்வோரும் பல பல மடங்காகிவிட்டனர்.
![டோட்டல் டேமேஜ் என்றாலும்... 2 நாளில் எகிறிய அன்னபூரணியின் பேஸ்புக் ஃபாலோவெர்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/29/1bf263fcd4c0825a8410666252fc3e44_original.jpg)
தற்போதைய நிலவரப்பட்டி, அன்னபூரணி அரசு அம்மாவின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 12 ஆயிரத்து 546. அதே போல , ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 728 பேர்.இந்த எண்ணிக்கை எல்லாம் , இரு நாட்களில் தடாலடியாக உயர்ந்தவை. இன்னும் உயரலாம். ஒரு சின்ன கூட்டுக்குள் இருந்த குருவியை, பருந்தாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததில், அன்னபூரணி அரசு அம்மாவின் பேஸ்புக் பக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு.
இவ்வளவு பஞ்சாயத்திற்கு அப்புறமும், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு அவ்வப்போது ஒரு பதிவு போட்டு, பதிலளித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் அட்மினின் பணி, அலப்பெரியது.
அந்த வகையில், ஒரு பக்கம் டோட்டல் டேமேஜ் என்றாலும், மற்றொரு புறம் அம்மாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை கண்டு அவரது அட்மின் உண்மையில் மெச்சிப் போயிருப்பார்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion