Daniel Balaji: அண்ணன் மகன் அதர்வா முதல் விஜய் சேதுபதி, ராதிகா வரை.. டேனியல் பாலாஜிக்கு பிரபலங்கள் அஞ்சலி!
நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் அஞ்சலியை நேரிலும் இணையத்திலும் தெரிவித்து வருகிறார்கள்.
டேனியல் பாலாஜி
தனித்துவமான வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சாமானிய மக்களால் பாராட்டப்படும் மனிதராக டேனியல் பாலாஜி இருந்திருக்கிறார். சமூக வலைதளங்களில் டேனியல் பாலாஜியை தெரிந்தவர்கள், அவரிடம் ஒரு முறை மட்டுமே பேசியவர்கள் எல்லாரும் கூறுவது ஒன்றைதான். யாராக இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக பேசக் கூடியவர் அவர் என்பதே! டேனியல் பாலாஜியின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.
ராதிகா சரத்குமார்
ராதிகா சரத்குமார் நடித்த சித்தி தொலைக்காட்சியில் தான் முதல் முதலில் அறிமுகமானார் பாலாஜி. இந்தத் தொடரில் அவர் நடித்த டேனியல் கேரக்டர் புகழ்பெற்றதால் பாலாஜி என்கிற பெயரோடு டேனியல் என்கிற பெயரும் சேர்ந்துகொண்டது. “டேனியல் பாலாஜி எங்களது ராடான் சித்தி தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகடிவ் ரோலில் சித்தி தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்கு கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை துயரில் ஆழ்த்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா சரத்குமார்
நடிகை ஆண்ட்ரியா
View this post on Instagram
வடசென்னையில் டேனியல் பாலாஜியோடு இணைந்து நடித்த நடிகை ஆண்ட்ரியா, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவருக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். டேனியல் பாலாஜியை அவர் நடித்த தம்பி கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி அவர் குறிப்பிட்டுள்ளது இந்தப் படத்தில் அவர்களுக்கு இடையில் இருந்த நட்பைக் காட்டுகிறது.
சந்தீப் கிஷன்
The One person who was always kind to me when I was an assistant Director,
— Sundeep Kishan (@sundeepkishan) March 30, 2024
Sent me to so many auditions with his reference when he realised that I was an aspiring actor..
Will always miss you & your beautiful Heart anna ♥️
Rest in Peace #DanielBalaji pic.twitter.com/TGkMMxG70P
நடிகர் சந்தீப் கிஷன் டேனியல் பாலாஜி பற்றிய முக்கியமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். தான் உதவி இயக்குநராக இருந்தபோது தன்னிடம் மிக கனிவாக நடந்துகொண்ட ஒரே மனிதர் அவர் தான் என்றும், நடிப்பில் தனக்கு ஆர்வம் இருப்பது தெரிந்ததும் தனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் தன்னை ஆடிஷனுக்கு அனுப்பினார் என்றும் கூறியுள்ளார்.
மோகன் ராஜா
திரைப்படக் கல்லூரியில் சேர தனக்கு உந்துதலாக இருந்தவர் டேனியல் பாலாஜி என்று தனி ஒருவன் பட இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் டேனியல் பாலாஜியின் அண்ணனும் பிரபல நடிகர் மறைந்த முரளியின் மகனுமான நடிகர் அதர்வா உள்ளிட்ட நடிகர்கள் டேனியல் பாலாஜியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலில் செலுத்தினார்கள்.