Samantha Temple:கஸ்தூரி மாதிரி இருக்கு.. பொதுமக்கள் கமெண்ட்டால் நொந்துபோன சமந்தா வெறியர்!
ஆந்திராவில் சமந்தாவிற்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிலையின் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தென்னிந்தியாவின் திரையுலகின் முக்கிய நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார். நடிகர் நாகசைதன்யாவை விவகாரத்து செய்த பிறகு ஆன்மீகம், மீண்டும் படப்பிடிப்பு என்று பரபரப்பானார்.
இந்த நிலையில், மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். தற்போதுதான் அவர் உடல்நலம் தேறி வருகிறார், அவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தனர். தமிழ்நாட்டை காட்டிலும் ஆந்திராவில் சமந்தாவிற்கு தீவிர ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
ஆந்திராவின் பாபட்லா பகுதியில் வசிப்பவர் தெனாலி சந்தீப். சமந்தாவின் தீவிர ரசிகரான இவர், அவர் உடல்நலம் தேற வேண்டும் என்று திருப்பதி, சென்னை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு பாதயாத்திரை சென்றார். மேலும், சமந்தா குணம் அடைந்தால் அவருக்கு கோயில் கட்டுவதாகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
இந்த நிலையில், சமந்தா தற்போது ஓரளவு குணம் அடைந்த நிலையில் அவருக்கு தனது வீட்டிலேயே ஒரு பகுதியில் கோயில் கட்டியுள்ளார். சமந்தாவின் பிறந்த நாளான நேற்று இந்த கோயில் திறப்பு விழா நடந்துள்ளது. சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மார்பளவு சிலை கொண்ட இந்த கோயிலை அவர் திறந்தார். சமந்தா சிலை நிறுவப்பட்டுள்ள இந்த கோயில் திறப்பு விழாவில் சமந்தா ரசிகர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
சிலை வடிவமைக்கும்போது அருமையாக இருந்த இந்த சமந்தா சிலை வர்ணங்கள் தீட்டப்பட்டு, தற்போது நிறுவப்பட்டிருக்கும்போது ரசிகர்களையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால், சிலையின் முகத்தோற்றமானது சமந்தா போலவே இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். சிலர் இந்த சிலையை பார்த்து இது நடிகை கஸ்தூரி போல உள்ளது என்றும், சிலர் இது சமந்தா போல இல்லை என்றும் கூறி வருகின்றனர். இதனால் சமந்தா வெறியரான தெனாலி சந்தீப் மிகவும் மனவேதனையில் நொந்து போயுள்ளார்.
தற்போது இந்த சிலைதான் இணையத்தில் உலா வருகிறது. சமந்தா ரசிகர்கள் பலரும் இதை வைரலாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு நடிகை குஷ்பு மற்றும் நடிகை நமீதா ஆகியோருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து புஷ்பா படத்தில் இடம்பெற்ற ம்ம்ம் சொல்றியா… ம்ம்ஹ்ஹ்ம் சொல்றியா பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமந்தா தற்போது சிடாடெல் இந்தியா வெர்சனில் நடித்து வருகிறார். மேலும், விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்திலும் நடித்து வருகிறார்.