மேலும் அறிய

முதல்ல BMW, இப்போ இன்னொரு கார்: அசத்தும் மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து!

தொகுப்பாளினி மணிமேகலை அண்மையில் BMW கார் வாங்கி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். அதற்குள் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளார்.

தொகுப்பாளினி மணிமேகலை அண்மையில் BMW கார் வாங்கி அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். அதற்குள் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்துள்ளார். புதிதாக இன்னொரு பிராண்ட் லேட்டஸ்ட் காரை வாங்கி, அதன் முன்னாடி கணவருடன் நின்று ஃபோட்டோ எடுத்து அப்லோடியிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்களும் குதூகலத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மணிமேகலையை நமக்கெல்லாம் சன் டிவி வாயிலாகத் தான் தெரியும். சன் மியூஸிக்கில் பிரபலமாக இருந்த தொகுப்பாளினி மணிமேகலை காதலரை கரம் பிடித்தார். தன்னுடைய காதலர் ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார் மணிமேகலை. அவர்களின் காதல் திருமணம் ஊடகங்களின் முக்கியச் செய்தியாகக்கூட இடம் பெற்றது. ஆனால் திருமணத்திற்குப் பின்னர் அவர் விஜய் டிவிக்கு மாறினார். வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிக்களில் மணிமேகலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்போது அவர் ஒன்றிரண்டு ஷோக்களையும் தனியாக தொகுத்து வழங்குகிறார். சின்ன ஃப்ரேம் உடல் வாகு, துருதுரு பேச்சு, குறும்பு, ஆங்கரிங் திறமை என அசத்தும் மணிமேகலை விஜய் டிவியில் ஒரு ரவுண்ட் வருவார் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டியும் மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜ்டாக வைத்திருப்பார். அவரது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை எப்போதும் பார்க்கலாம். அது போல் அவர் யூடியூப் சேனல் ஒன்றும் வைத்திருக்கிறார். ஹுசைன் மணிமேகலை என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிலும் தவறாமல் வீடியோ அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார். 

முதல்ல BMW, இப்போ இன்னொரு கார்: அசத்தும் மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து!

ஒருமுறை மணிமேகலை வீட்டில் பணிப்பெண் வராததால் தானே குக்கரில் சோறு வைக்க அது வீடு முழுக்கும் தெறித்து விழ கணவர் ஹூசைன் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து இருவரும் ஒரு கலகலப்பு வீடியோவைப் பதிவு செய்தனர். அந்த வீடியோ ரொம்பவே பிரபலமானது. அதை வைத்து மீம்ஸ் கூட வெளியாகின. அந்த அளவுக்கு மணிமேகலைக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

அது போலவே மணிமேகலை சென்ற கார் விபத்து என்ற செய்தி வெளியானதுமே அவரது ரசிக கோடிகள் உடைந்து போயினர். அந்த விபத்து குறித்தும் மணிமேகலை யூடியூபில் வீடியோ பதிவு செய்தார்.

இது குறித்து பேசிய மணிமேகலை, ஜஸ்ட் மிஸ்ஸில் இருவரும் உயிர் தப்பினோம் என்று கூறியிருந்தார். "2017 ஆம் ஆண்டு விபத்து நடந்தவுடன்  எனக்கு திருமணம் ஆனது. இப்போ மீண்டும் விபத்து நேர்ந்துள்ளது. எனக்கு 2021 ஆம் ஆண்டு முழுவதுமே சோதனையாக இருக்கிறது. இந்த ஆண்டு தான் காலில் சுடுத் தண்ணீரை காலில் ஊற்றி விட்டு வீட்டில் ஓய்வு எடுத்தேன். இந்த ஆண்டு ராசியே இல்லை. 2022 பிறந்த உடன் நான் அதனை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன்" என வீடியோவில் பேசியிருந்தார்.

இப்போது லேட்டஸ்டாக வாங்கிய புதிய காருடன் மகிழ்ச்சி வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Embed widget