மேலும் அறிய

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பிரபல பாப் பாடகர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன் திருமணம்

ரிலையன்ஸ் குழுமத்தில் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரான விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். உலகளவில் அதிக பொருட்செலவில் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு கருதப் படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக பல்வேறு கட்டங்களாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் உலகளவில் பிரபலமான பாப் பாடர்கள் கலந்துகொண்டு இசை மட்டும் நடன நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாப் பாடர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்கிற விவரங்களைப் பார்க்கலாம் 

பியான்ஸ் (Beyonce)

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

முகேஷ் நீட்டா அம்பானியின் மகளான இஷா அம்பானியின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இஷா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் பிரபல பாடகர் பியான்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு ரூ 33 கோடி அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது.

ரிஹானா (Rihanna)

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

சமகாலத்தில் பாப் பாடகர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒருவர் ரிஹானா . இவரது பாடல்கள் மட்டுமில்லாமல் வெளிப்படையான அரசியல் கருத்துக்களுக்காகவும் புகழ்பெற்றவர். கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற ஆனந்த் ராதிகா திருமண கொண்டாட்டத்தில் ரிஹானா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவருக்கு ரூ 74 கோடி சம்பளமாக வழங்கப் பட்டது. 

ஏகான் (Akon)

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

ஜாம் நகரில் நடைபெற்ற இதே  நிகழ்ச்சியில் 90 களின் பிரபல பாடகரான ஏகான் கலந்துகொண்டார். இவரது Smack That , Right Now , Lonely , I wanna Love You , உள்ளிட்ட பாடல்கள் மிக புகழ்பெற்றவை. இந்தியாவில் ஏகானின் பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏகானுக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. 

ஜாம் நகரில் நடைபெற்ற இந்த மொத்த நிகழ்ச்சிக்கும் 1200 கோடி செலவிடப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஷகிரா (Shakira)

ஜாம் நகரில் நடந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நவீன் சொகுசு கப்பலில் பிரம்மாண்டமான பார்ட்டி ஒருங்கிணைக்கப் பட்டது. இத்தாலியில் இருந்து தொடங்கிய இந்த கப்பல் பயணம் பிராண்ஸ் நாட்டில் முடிவடைந்தது. நடுக்கடலில் பிரபல பாடகி மற்றும் நடனக் கலைஞரான ஷகிராவின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அவருக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளாக வழங்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

கேட்டி பெர்ரி (Katty Perry)

ஷகிராவைத் தொடர்ந்து இந்த கப்பல் பயணத்தில் கலந்துகொண்ட மற்றொரு பாப் பாடர் கேட்டி பெர்ரி. இவருக்கும் 45 கோடி சம்பளமாக வழங்கப் பட்டது.  நடுக்கடலில் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு மட்டும் மொத்தம் 7500 கோடி செலவிடப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜஸ்டின் பீபர் (Justin Bieber)

Anant Ambani Radhika Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பாப் பாடகர்கள்...யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் தெரியுமா?

தற்போது வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கையில் மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தில் புகழ்பெற்ற வீடான் ஆண்டிலியாவில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 5 ஆம் தேதி  நடைபெற இருக்கும் சங்கீத் கொண்டாட்டத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கு அவர் 83 கோடி சம்பளாக பெற்றுள்ளாராம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
Embed widget