மேலும் அறிய

Anandita: ஒரே அசிங்கமா போச்சு.. விஜய் மீது மயக்கம் போட்டு விழுந்த குஷ்பூ மகள்.. நடந்தது என்ன?

கல்யாண பத்திரிக்கை வைக்கப்போகும் போது அப்பா, அம்மா இருவரும் நீ அழ மாட்டேன் என சத்தியம் செய்து கொடு என கேட்டார்கள். ஆனால் நான் அழவில்லை. அந்த 15 நிமிட சந்திப்பில் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் என அனந்திதா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு பிரபலமாக நட்சத்திர தம்பதி சுந்தர்.சி - குஷ்பூவின் இளைய மகளான அனந்திதா களமிறங்கியுள்ளார். டபுள் ஆக்குபன்சி என்ற படத்தின் மூலம் அனந்திதா  கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படம்  ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே படக்குழு பல்வேறு ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வருகிறது. 

அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனந்திதா, முதலமைச்சர் விஜயை நடிகராக இருந்தபோது, தான் பார்த்த முதல் நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதில், “நான் விஜயை முதல்முறையாக சந்தித்தேன். அவர் என்னை வாம்மா என அழைத்து தோள் மீது கை வைத்தார். அவ்வளவு தான் நான் மயங்கி விட்டேன். உடனே என்னை தாங்கி பிடித்து ஓகே வாம்மா என கேட்டார். அதேசமயம் நான் அவரைப் பார்த்து விட்டு காரில் ஏறி அமர்ந்து விஜயை பார்த்து விட்டோம் என நெகிழ்ந்து போய் அழுதேன்.

ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டு இயல்பு நிலைக்கு திரும்பினேன். அப்போது என்னுடைய கார் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. என்னடா என பார்த்தால் காரின் வெளியே நின்று விஜய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரது முன்னிலையிலும் ஒரே அசிங்கமா போய் விட்டது. அந்த சந்திப்பு 2021ம் ஆண்டு நடைபெற்றது. 

அதன்பிறகு வாரிசு ஷூட்டிங்கில் அம்மா நடித்ததால் நான் விஜயைப் பார்க்க சென்றிருந்தேன். அப்போது அம்மா என்னிடம், 6 மாதம் முன்பு தான் விஜயைப் பார்க்க போனோம். அதனால் அவரைப் பார்த்து அழுது மானத்தை வாங்கிறாத, இது ஷூட்டிங் ஸ்பாட் என சொல்லித்தான் அழைத்து சென்றார். நான் தைரியமாக இருப்பேன் என சொல்லி அடுத்த நிமிடம் விஜயைப் பார்த்ததும் அழுது விட்டேன். ரொம்ப சந்தோசமாகவும், கோபம் வந்தாலும் அழுது விடுவது என் வழக்கம். 

Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!

அதேபோல் தான் கல்யாண பத்திரிக்கை வைக்கப்போகும் போது அப்பா, அம்மா இருவரும் நீ அழ மாட்டேன் என சத்தியம் செய்து கொடு என கேட்டார்கள். ஆனால் நான் அழவில்லை. அதேசமயம் நான் செய்ததைப் பார்த்து விஜய் கொஞ்சம் பயந்து விட்டார் என நினைக்கிறேன். எங்களுடைய சந்திப்பு ஒரு 15 நிமிடம் மட்டும் தான் நடந்தது. எங்களுக்கு எதிராக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த 15 நிமிடமும் நான் விஜயை சிரித்துக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அக்கா, கொஞ்சம் நிறுத்துறீயா, விஜய் பயந்துடப்போறாரு என தெரிவித்தாள். நான் உடனே அவள் பக்கமாக திரும்பி என்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன். விஜய் ரொம்ப இனிமையானவர்” என அனந்திதா தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget