மேலும் அறிய

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார். இவருக்குப் பின்னால் காவிக்கட்சி நிற்கிறது என ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயித்த நிலையில் அரசியலுக்கு வர நினைக்கும் தனுஷ், ராகவா லாரன்ஸ் போன்றவர்களை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜயின் வெற்றியால் அரசியலில் மாற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் சினிமாத்துறையில் இருந்த ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியது. மக்கள் மாற்றம் வேண்டும் என வாக்களித்தது என பல சம்பவங்கள் இந்த தேர்தலில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் கோலோச்சி வரும் பல முன்னணி நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டுள்ளது.

இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளிப்படையாகவே தவெகவில் இணைந்து அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். அதேசமயம் நடிகர் விஷால் விரைவில் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்து விட்டார். இப்படியான நிலையில் விஜய்க்கு எதிராக அதிக இளம் வயதினர் அடங்கிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள தனுஷை அரசியலுக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனுஷிடம் நிகழும் மாற்றம்

இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தனுஷின் கருத்துகள் ஒவ்வொன்றும் அரசியல் பயணத்திற்கு அச்சாரமாக அமைந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனுஷ் அரசியல் வருகைக்கு அடித்தளமாக அவரின் அப்பாவும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது. 

வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

இந்த நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவில், “தனுஷை சுள்ளான் என குறிப்பிட்டு கடந்து வந்த பாதை என்ற பெயரில் நீண்ட பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், “அறிமுக படத்தில் இருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். சுள்ளான் படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார். தென்னிந்திய ப்ரூஸ் லீ எனும் பட்டம் வேறு தந்து கொண்டார். படிக்காதவன், மாப்பிள்ளை, பரட்டை என‌ ரஜினி  பட டைட்டில்களில் நடித்தார். அவரைப் போலவே வெள்ளை வேட்டி, சட்டை, ருத்ராட்சம், ஓம் நமச்சிவாயா என கலர் மாறினார்.

Also Read: Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!

ரஜினி எப்படி தலித் மக்கள் மீது பாசம் உள்ளதாக காலா, கபாலி படம் மூலம் காட்டிக் கொண்ட நிலையில் தனுஷூம் கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேசம் கட்டினார்.அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர். திருச்சிற்றம்பலம், ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் 'ஓம் நமச்சிவாயா' என இவர் சொல்வதன் அஜண்டா உங்களுக்கு தெரிந்ததே. இந்த தேர்தலில் விஜய் தோற்றிருந்தால் இந்த சுள்ளான், ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்திருப்பார்கள். ஆனால் விஜய் ஜெயித்தபிறகு  இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள். தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார். இவருக்குப் பின்னால் காவிக்கட்சி நிற்கிறது. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால்... அதைவிட கேவலம் இருக்க முடியாது.

Advertisement

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget