Anant Ambani: அமிதாப் முதல் ரஜினி வரை.. அம்பானி மகன் திருமண கொண்டாட்டத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு!
ஆனந்த் அம்பானி குஜராத்தின் ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்தது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் மகளுக்கு திரையுலகில் அழைக்கப்பட்ட பிரபலங்கள் பற்றிய தகவல்கள் பற்றி காணலாம்.
ரிலையன்ஸ் நிறுவனங்கள் குழு தலைவரும், முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டு நீடா அம்பானியை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் 2018 ஆம் ஆண்டு இஷாவுக்கு திருமணம் நடந்த நிலையில், 2019ல் மூத்த மகனான ஆகாஷூக்கு திருமணம் நடைபெற்றது.
இப்படியான சூழலில் ஆனந்த் அம்பானி குஜராத்தின் ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்தாண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதற்கிடையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. 4 மாதங்கள் முன்னதாகவே குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் மாதமே இந்த திருமணத்துக்கான கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளது.
இதில் உலகின் முன்னணி தொழிலதிபர்கள், இந்திய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவானது ஆட்டம், பாட்டம் என களைக்கட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, குமார் மங்கலம் பிர்லா, கௌதம் அதானி, சஞ்சீவ் கோயங்கா, ரோஷ்னி நாடார், பவன் முன்ஜால், சுனில் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆன்மீகத்துறையில் சத்குரு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. மேலும் சினிமாத்துறையில் இருந்து அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், சைஃப் அலிகான், சங்கி பாண்டே, ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல், கேத்ரீனா கைஃப், மாதுரி தீட்சித், ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர், போனி கபூர், அனில் கபூர் , சித்தார்த் மல்ஹோத்ரா, ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், வருண் தவான் என பல இந்திய திரையுலகின் பல்வேறு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Mysskin: “புத்தகம் படிக்கிறது தான் வேலையே” .. நண்பர்களின் சக்ஸஸ் சீக்ரெட் பற்றி பேசிய மிஷ்கின்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

