
Aishwarya Rai: அம்பானி வீட்டு திருமணம்: பச்சன் குடும்பத்தில் மிஸ்ஸிங்.. மகளுடன் அசத்தலாக வந்த ஐஸ்வர்யா ராய்!
Aishwarya Rai at Anant Ambani wedding : முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் அமிதாப் பச்சன் குடும்பம் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா ராயும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக பிரம்மாண்டமாக நடைபெற்றன. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள ஏராளமான திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருமண முன்வைபவமே பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடைபெற்று வாய்பிளக்க வைத்துவிட்டது.
ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண விழாவை மேலும் அலங்கரித்தனர். அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் பிக்பாஸ் அமிதாப் பச்சன் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் அவரின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஸ்வேதா நந்தா மற்றும் அவரின் மருமகன் நிகில் நந்தா மற்றும் குழந்தைகள் நவ்யா நவேலி நந்தா மற்றும் அகஸ்தியா நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ரெட் கார்பெட்டில் போஸ் கொடுத்தனர்.
அமிதாப் பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் காணப்படவில்லை என்றாலும் மகள் ஆராத்யா உடன் தனியாக வருகை தந்து இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். பாரம்பரிய உடையில் மிகவும் ஸ்டைலிஷாக ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்து அழகாக மகளுடன் போஸ் கொடுத்தார் ஐஸ்வர்யா ராய். அவரின் இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
View this post on Instagram
இந்நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாததும், தனியாக வருகை தந்துள்ளதும் இவர்கள் குடும்பத்தில் பிரிவா எனும் வகையில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

