விஜய் தேவரகொண்டா கல்யாணம் ஆனவர் மாதிரிதான்... கொளுத்திப் போட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி..
முன்னதாக இதேபோல் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவுடன் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டாவை இணைத்து கிசுகிசு ஒன்றைப் பகிர்ந்தது பேசுபொருளானது.
நடிகர் விஜய் தேவரகொண்டா என்ன தான் பேச்சிலராக வலம் வந்தாலும், அவர் நடைமுறையில் திருமணம் ஆனவர் தான் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
கொளுத்திப் போட்ட ஜான்வி!
மலையாள ‘ஹெலன்’ பட ரீமேக்கான ‘மிலி’ படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் நடிகை ஜான்வி பிசியாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த அவரிடம், தனது சுயம்வரத்தில் கலந்துகொள்ள மூன்று நடிகர்களைத் தேர்வு செய்யுமாறு கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பாலிவுட்டில் பெரும்பாலான நடிகர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது” எனக் கூறி மூன்று நடிகர்களை தேர்வு செய்ய முடியாமல் ஜான்வி திணறிய நிலையில், அவரிடம் விஜய் தேவரகொண்டாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு விஜய் தேவரகொண்டாவும் நடைமுறையில் திருமணமானவர் தான் என ஜான்வி குறும்பாக பதில் அளித்துள்ளார்.
ராஷ்மிகாவுடன் காதலா?
View this post on Instagram
ஏற்கெனவே விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் சில ஆண்டுகளாக கிசுகிசுக்கப்படும் நிலையில், ஜான்வி கபூரின் இந்த பதில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் அமைந்து விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆர்மியினர் மத்தியில் குஷியைக் கிளப்பியுள்ளது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவரும் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். டோலிவுட்டில் ராஷ்மிகா கால் பதித்தது முதல் நெருங்கிய நண்பர்களாக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இவர்களது ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை விட ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை இருவரது ரசிகர்களும் மிகவும் ரசித்துக் கொண்டாடி வருகின்றனர்.
வம்பிழுத்த அனன்யா பாண்டே!
முன்னதாக இதேபோல் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவுடன் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனாவுடன் விஜய் தேவரகொண்டாவை இணைத்து கிசுகிசு ஒன்றைப் பகிர்ந்தது பேசுபொருளானது.
தற்போது ஜான்வி கபூரும் இதே பாணியில் பதில் அளித்துள்ள நிலையில், விஜயும் ராஷ்மிகாவும் நிச்சயம் டேட்டிங் செய்து வருகிறார்கள் என ஆரூடம் சொல்லி வருகின்றனர் இவர்களது ரசிகர்கள்!