பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தீவிரவாதிதான்.. பழைய வீடியோவை வைத்து சாய் பல்லவிக்கு எதிர்ப்பு
இந்திய ராணுவம் பற்றி நடிகை சாய் பல்லவியின் கருத்தைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் சாய் பல்லவியை புறக்கணிப்போம் என்கிற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது
சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தில் நடித்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். முகுந்தின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருந்து வரும் நிலையில் நடிகை சாய் பல்லவியின் பழைய வீடியோ கருத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#SaiPallavi leads a movie on Major Mukund Varadarajan. AC's 2014 sacrifice in shopian, adopted from India's most fearless by Shiv Aroor and Rahul Singh..
— 𝐑𝐞𝐞𝐥𝐑𝐢𝐝𝐞𝐫 (@ReelRiderr) October 28, 2024
Which will be a hit among audience!!! #Amaran
But Why is it trending with #BoycottSaiPallavi ? pic.twitter.com/hFbzlgxZwG
இந்திய ராணுவம் பற்றி சாய் பல்லவி
பழைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி இப்படி பேசினார் "காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற படத்தை நான் சமீபத்தில் பார்த்தேன். அந்த படத்தில் அங்கிருந்த பண்டித்கள் எப்படி கொள்ளப்பட்டார்கள் என்பதை காட்டினார்கள். அதேபோல் சமீபத்தில் மாடு வைத்திருந்த ஒரு இஸ்லாமியரை ஜெய் ஶ்ரீ ராம் என்று முழக்கமிட்டபடி அவரை அடித்து கொன்றார்கள். இந்த இரண்டு சம்பவத்திற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. நம் மதத்தின் மேல் இருக்கும் பற்றால் இன்னொருவரை காயப்படுத்தக் கூடாது. பாகிஸ்தான் ராணுவத்தைப் பொறுத்தவரை இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள் தான் நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் நல்ல மனிதராக இல்லாவிட்டால் எந்த பலனும் இல்லை " என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியின் கருத்து இந்துத்துவ ஆதரவாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தை தீவிரவாதிகள் என்று சொல்லிவிட்டார் இவர் எப்படி அமரன் படத்தில் நடித்தார் என்று இந்த கும்பல் கூச்சல் போட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் சாய் பல்லவியை புறக்கணிப்போம் என்கிற் ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. மற்றொரு தரப்பினர் சாய் பல்லவியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.
சாய் பல்லவி தன்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை அவர் பாகிஸ்தான் பார்வையில் இருந்து அவர் பேசியுள்ளார் என அவர்கள் தெவித்துள்ளார்கள். ஆனால் இதற்கு சாய் பல்லவி ஏற்கெனவே பதிலளித்துவிட்டார். தன் கருத்து வன்முறைக்கு எதிரானது மட்டும்தான் என்றார்