Pushpa: ரஷ்யாவிலும் கால் பதிக்கும் "புஷ்பா"...! பறக்க தயாரான அல்லு அர்ஜுன்...! ரசிகர்கள் ஹாப்பி..
புஷ்பா திரைப்படத்தின் பிரீமியர் காட்சி அடுத்த வாரம் ரஷ்யாவில் திரையிடப்படவுள்ளது. ரஷ்ய ரசிகர்களின் வரவேற்பை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யாவிற்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறார் அல்லு அர்ஜுன்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த திரைப்படம் புஷ்பா. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டுகளை குவித்து வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வகையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் திரையிடப்படும் எனும் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.
ரஷ்யாவில் புஷ்பா:
இயக்குனர் சுகுமாரின் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் டிசம்பர் 2022 வெளியாகவுள்ளது. அதன் பிரீமியர் காட்சி அடுத்த வாரம் ரஷ்யாவில் திரையிடப்படவுள்ளது. அங்கு ரஷ்ய மக்களின் வரவேற்பை நேரில் பார்வையிடுவதற்காக ரஷ்யாவிற்கு அடுத்த வாரம் பறக்க தயாராகி வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.
Icon star @alluarjun is all set to leave for the release of #PushpaTheRise in #Russia next week. https://t.co/R7gviTkZRt#AlluArjun #alluarjun #Pushpa #Pushpa2 #Pushpa2TheRule
— TOI ETimes Telugu (@ETimesTelugu) November 25, 2022
சிறப்பான ஆண்டு :
இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. புஷ்பா படத்தின் வெற்றி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய தின அணிவகுப்பில் கிராண்ட் மார்ஷலாக இந்திய நாட்டின் பிரதிநிதியாக அவர் கலந்து கொண்டது மற்றொரு சிறப்பு. மேலும் ஸ்டைலிஷ் ஸ்டார் 'இந்தியன் ஆஃப் தி இயர்' என்ற பட்டத்தை பெற்று புகழின் உச்சிக்கு சென்று விட்டார் அல்லு அர்ஜுன்.
View this post on Instagram
புஷ்பா : தி ரூல் மிகவும் ஸ்பெஷல் :
புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் சர்வதேச அளவில் மக்களை ஈர்க்கும் அதே சமயத்தில் புஷ்பா : தி ரூல் படத்தையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். புஷ்பா முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மிகவும் பெரிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுகுமார். புஷ்பா : தி ரூல் படத்திற்காக பாங்காக் சென்று படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.