Pushpa 2: "சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி” - ராஷ்மிகாவின் துள்ளல் நடனத்தில் புஷ்பா 2 பாடல்!
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் “புஷ்பா - தி ரைஸ்”. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் இருந்து 2வது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் “புஷ்பா - தி ரைஸ்”. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த கதையில் முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் எப்படி கடத்தல் மாஃபியாவின் தலைவனாக உருவெடுக்கிறார் என்பது பற்றி இருந்தது.
Join Pushpa Raj and Srivalli as they vibe to the super catchy #Pushpa2SecondSingle ❤️🔥#TheCoupleSong out now 🤩
— Mythri Movie Makers (@MythriOfficial) May 29, 2024
▶️ https://t.co/Ko86XxgEyS#Sooseki #Angaaron #Soodaana #Nodoka #Kandaalo #Aaguner 👌
Sung by @shreyaghoshal ✨
A Rockstar @ThisIsDSP Musical 🎵#Pushpa2TheRule… pic.twitter.com/FuML70gZMP
இந்த படத்தின் 2 ஆம் பாடலான "சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி” பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் இந்த பாட்டை அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். முதல் பாகத்தில் “சாமி” பாடல் பலத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பாடல் மெலடியாக அமைக்கப்பட்டுள்ளது. கேட்கவும் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

