Watch Video : தூக்கிச்சென்ற ரன்பீர்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆல்யா.. பாலிவுட்டை கலக்கும் வீடியோ..
ஐந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவழித்த பால்கனியே திருமண மேடையாக மாறியிருக்கிறது என்னும் அழகான வாசகத்துடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஆல்யா பட்.
பாலிவுட்டில் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமணம். ஆல்யா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும் , தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஹாட் ஜோடியின் திருமணம் இன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ரன்பீர், ஆலியா குடும்பத்தினர் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் காலையில் இருந்தே சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் ஆல்யா தற்போது திருமணம் ஃபோட்டோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, திருமணம் முடிந்த கையோடு பத்திரிக்கையாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்த ஜோடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது. அதனை அடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறும் வேளையில், திடீரென ஆலியாவை தூக்கிச்சென்றார் ரன்பீர். இது சமூக வலைதளத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
வீடியோவைக் காண:
#WATCH | Actors Alia Bhatt and Ranbir Kapoor make their first public appearance after tying the knot in Mumbai, today. pic.twitter.com/yQP5bTDnvM
— ANI (@ANI) April 14, 2022
ஐந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவழித்த பால்கனியே திருமண மேடையாக மாறியிருக்கிறது என்னும் அழகான வாசகத்துடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் ஆல்யா பட்.
Actors #AliaBhatt and #RanbirKapoor tied the knot in Mumbai today. #RanbirAliaWedding
— ANI (@ANI) April 14, 2022
(Pics: Alia Bhatt's Instagram account) pic.twitter.com/Ldfib3MvjX
தனது இன்ஸ்டாகிராம் செய்தியில், "எங்கள் பால்கனியிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இனி அன்பை, முத்தங்களை, செல்ல சண்டைகளின் நினைவுகளை ஒன்றாக கட்டியமைக்கப்போகிறோம். மிக முக்கியமான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்புக்கும் என் நன்றி. இந்த அன்பு எங்களுடன் இருக்கும்” என தெரிவித்திருக்கிறார் ஆல்யா பட்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்