Alia Bhatt Pregnancy: அம்மாவாகும் அலியாபட்.. இன்ஸ்டாவில் போட்டோவுடன் நெகிழ்ச்சி பதிவு..!
நடிகை அலியாபட் கர்ப்பம் தரித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் போட்டோவை பகிர்ந்துள்ளார்

நடிகை அலியாபட் கர்ப்பம் தரித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “எங்களது குழந்தை விரைவில் வரவிருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். அருகில் அவரது கணவரான ரன்பீர் கபூர் அமர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram
கடந்த 2019 ஆண்டிலிருந்து காதலித்து வந்த அலியா பட்டும், ரன்பீர் கபூரும் பொதுநிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றும் தங்களது காதலை வெளிப்படுத்தினர். இவர்களது காதலை ஏற்றுக்கொண்ட இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
View this post on Instagram
இதனையடுத்து இவர்களது திருமணம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில்தான் தான் கர்ப்பம் தரித்துள்ள செய்தியை அலியா பட் வெளியிட்டு இருக்கிறார். இந்தப்பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

