மேலும் அறிய

Thunivu Trailer: ஒரே நாளில் 25 மில்லியன்... 24 மணிநேரத்தில் 'துணிவு' ட்ரெயிலர் படைத்த புதிய சாதனை...!

துணிவு படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி ஒரே நாளில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ட்ரெயிலர் வெளியானது. வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கொள்ளை கூட்ட தலைவனாக அஜித் நடித்துள்ளார்.

துணிவு ட்ரெயிலர் சாதனை:

நேற்று வெளியான ட்ரெயிலரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நாயகனாக அஜித் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சிலர் துணிவு ட்ரெயிலர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை போல உள்ளதாக விமர்சனமும் செய்து வருகின்றனர்.

Thunivu Trailer: ஒரே நாளில் 25 மில்லியன்... 24 மணிநேரத்தில் 'துணிவு' ட்ரெயிலர் படைத்த புதிய சாதனை...!

விமர்சனங்கள் இருந்தாலும் பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்ற துணிவு ட்ரெயிலர் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். துணிவு படத்தில் நடிகர் அஜித்துடன் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் மிரட்டலான ஆக்‌ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பிரேம், ஜான் கொக்கைன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

எச்.வினோத் இயக்கத்தில் ஏற்கனவே அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் நடித்துள்ளார். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், துணிவு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணிவு படத்தின் ட்ரெயிலரில் அஜித்தின் கெட்டப் மற்றும் நடிப்பு மிரட்டலாக அமைந்தாலும், படத்திற்காக போடப்பட்டுள்ள அரங்குகள் வெளிப்படையாக தெரிவது பின்னடைவாக அமைந்துள்ளது.

வங்கிக்கொள்ளை கும்பலுக்கும், அதைத்தடுக்க போராடும் காவல்துறையினருக்கும் இடையே நடக்கும் மோதலையும் சுவாரஸ்யமான திரைக்கதையாக எச்.வினோத் வடிவமைத்திப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே ஜிப்ரான் இசையில் வெளியாகிய சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீஸ் தேதி..?

Thunivu Trailer: ஒரே நாளில் 25 மில்லியன்... 24 மணிநேரத்தில் 'துணிவு' ட்ரெயிலர் படைத்த புதிய சாதனை...!

துணிவு படத்தின் பாடல்களும், ட்ரெயிலரும் வெளியாகினாலும் இதுவரை படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வலிமை படத்தில் இருப்பது போல அல்லாமல் இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு இந்த படத்தில் ஏராளமான நகைச்சுவை மற்றும் வில்லத்தன காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமுத்திரக்கனி காவல்துறை அதிகாரியாகவும், பிரேம் வங்கி அதிகாரியாகவும், பக்ஸ் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கின்றனர். படத்தின் ட்ரெயிலர் வெளியாகியிருந்தாலும் அஜித்குமாரின் கதாபாத்திரத்தின் பெயர் மட்டும் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Thunivu Trailer: மிரட்டும் அஜித்.. தெறிக்கும் தோட்டாக்கள்.. கோலிவுட்டின் மணி ஹைஸ்ட் துணிவு ட்ரெயிலர் ரிலீஸ்..!

மேலும் படிக்க: Thunivu: வில்லத்தனம்.. நெகட்டிவ் ரோல்.. மெகா ஹிட் பட்டியலில் இணையுமா துணிவு..? வரலாறு சொல்வது இதுதான்..!

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget