Ajith 61: அஜித் படத்தின் அடுத்த தயாரிப்பாளர் போனிகபூர் இல்லையாம், வேறு யாரு?
அடுத்து படத்திற்கான அப்டேட் பற்றிய கேள்விகளும் சமூகவலைதள பக்கங்களை சுற்ற ஆரம்பித்திருக்கிறது. எந்த திரைப்படம், எந்த அப்டேட்டானாலும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால், மோஷன் போஸ்டரைவிட அடுத்து வெளியான நடிகர் அஜித்தின் ஸ்டில்ஸ் சமூகவலைதளத்தில் வைரலானது, ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்ததாக அமைந்தது.
ஒரு வழியாக வலிமை பட அப்டேட் வந்திருக்கும் நிலையில், அஜித்தின் 61-வது படம் தொடர்பான தகவல்களை கேட்டும் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டு செய்து வருகின்றனர். மேலும், இப்போது அஜித் 61 திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இல்லையென்றும், தனுஷின் புதிய படமான ‘மாறன்’ திரைப்படத்தை தயாரித்து வரும் சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் படங்களை சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
கோபம் வேண்டாம்.. மன்னிப்பு கேட்ட சினேகனின் மனைவி கன்னிகா!
Very happy in presenting you the first look of our next film #Maaran #மாறன் with @dhanushkraja 🔥#MaaranFirstLook #HappyBirthdayDhanush @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek @thondankani @smruthi_venkat @KK_actoroffl @Actor_Mahendran pic.twitter.com/qyWdFuQNju
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) July 28, 2021
முன்னதாக, அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஏற்கெனவே இந்த மூவர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும், இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
The wait is over! #ValimaiMotionPoster #Valimai pic.twitter.com/22z59gGNL4
— Boney Kapoor (@BoneyKapoor) July 11, 2021
அஜித் ரசிகர்கள், பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டி, இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் கேட்டு அதகளப்படுத்தினர். இந்நிலையில், அடுத்து படத்திற்கான அப்டேட் பற்றிய கேள்விகளும் சமூகவலைதள பக்கங்களை சுற்ற ஆரம்பித்திருக்கிறது. எந்த திரைப்படம், எந்த அப்டேட்டானாலும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
G.V.Prakash | ”எனக்கு முதல்ல மொழி, அப்புறம்தான் தேசம் “- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பளீச் பதில்!