Ajith kumar: ''நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?'' - தக் ஃலைப் செய்த அஜித்! வைரல் வீடியோ!
அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
நடிகர் அஜித்தின் அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்களை விட அவரது பைக் பயண ஃபோட்டோக்களும் வீடியோக்களும் தான் தற்போதைய ட்ரெண்டிங்காக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 எனப்படும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதாலும், ‘வலிமை’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினாலும் ‘ஏகே 61’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த நிலையில், அஜித் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார்.
View this post on Instagram
இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் அஜித் லடாக் பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்ற அவர் அங்கிருந்து பைக் மூலம் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அஜித்தை இமயமலை பயணத்தில் சந்தித்த ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், உங்களை ரெண்டு நாளா தேடினோம் சார். என ரசிகர்கள் சொல்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் அஜித், தேடினீங்களா? நான் என்ன கொலைகாரனா? கொள்ளைகாரனா? என நகைச்சுவையாக பதிலளிக்கிறார். பின்னர் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கிறார். அஜித்தின் குரலை திரைப்படங்களில் மட்டுமே கேட்க முடிகிறது என்ற நிலை கிட்டத்தட்ட உருவாகிவிட்ட நிலையில் அஜித்தின் தக் லைஃப் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Ajith Sir Voice 🥺😍❤️#AK61 https://t.co/HdAyU4du8k
— GJ (@imgj13) September 16, 2022
Exclusive Video. #Ajith sir ❤️#AjithKumar #AK #AK61 pic.twitter.com/MHJQ26cL4F
— Ajith Network (@AjithNetwork) September 12, 2022