சம்பளமே வேண்டாம் அத மட்டும் குடுங்க...AK 64 படத்திற்கு தயாரிப்பாளருடன் அஜித் பேசிய செம டீல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கு அஜித் ரூ 200 கோடி சம்பளமாக கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

AK 64
குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தை யார் இயக்கப்போது என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்தது . இப்படியான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனே அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. குட் பேட் அக்லி படத்தின் கமர்சியல் வெற்றியால் மகிழ்ந்துபோன அஜித் தந்து அடுத்தபடத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனை இயக்க கேட்டுள்ளார். இப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில் ' குட் பேட் அக்லி திரைப்பட அஜித் ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்தும் விதமாக இருந்தது. AK 64 அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக ஒரு மாஸ் என்டர்டெயினராக இருக்கும்' என கூறியுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அஜித் சம்பளம்
குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பின் அஜித் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இதனால் AK 64 படத்தை யார் தயாரிக்கப் போவது என்கிற கேள்வியும் இருந்து வருகிறது. பல்வேறு படங்களை விநியோகித்த் ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அஜித் குமார் ரூ 200 கோடி சம்பளமாக கேட்டதால் தயாரிப்பு நிறுவனமுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது. 200 கோடி சம்பளம் வழங்க முடியாத பட்சத்தில் அஜித் தரப்பில் இருந்து டீல் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் சம்பளமே வாங்காமல் படத்தில் நடிப்பதாகவும் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டலைட் விற்பனையில் வரும் தொகையை அஜித் சம்பளமாக பெற்றுக்கொள்வார் என்றும் திரையரங்கத்தில் வரும் வசூலை தயாரிப்பாளர் எடுத்துக் கொள்வார் என்கிற உடன்படிக்கைக்கு படக்குழு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அதிகப்படியான சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் முதலிடத்தில் உள்ளார். எச் வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படத்திற்கு அவர் ரூ 275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்திற்கு ரூ 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ 110 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.





















