மேலும் அறிய

Ajith: விளம்பரத்தில் நடித்த அஜித்! இது என்ன புது அதிசயம்? என்ன திடீர்னு?

கார் ரேஸிங்கில் சொந்தமாக அணியை நடத்தி வரும் அஜித்குமார் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். சிறுவயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்கள் மீது தீராத காதல் கொண்ட அஜித்குமார் சொந்தமாக அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். இதற்காக இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார். 

கார் ரேஸிங்கில் அஜித்:

அஜித்குமார் ரேஸிங் அணி 24எச் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப், துபாயில் நடந்த ரேஸ் என பல ரேஸ்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போடியத்திலும் இடம்பிடித்து உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

பெப்சி, கோலா வருகைக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த கேம்பா நிறுவனத்தை கடந்தாண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இதை மீண்டும் புத்துயிர் பெற வைக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், கேம்பாவை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

விளம்பரத்தில் நடித்த அஜித்:

இதற்காக, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஜித்குமார் கேம்பா குளிர்பானத்திற்காக தற்போது விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரு கார் ரேஸிங் அணியை நடத்துவது என்பது மிக மிக சவாலான விஷயம் ஆகும். இந்த சூழலில், தனது அஜித்குமார் ரேஸிங் அணியின் ஸ்பான்ஸர்களில் ஒருவரான கேம்பா நிறுவனத்திற்காக அஜித் விளம்பரத்தில் நடித்துள்ளார். 

நீண்ட இடைவேளை:

தற்போது புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தொலைக்காட்சி விளம்பரம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஜித்குமார் சிறு வயதில் ஒரு செருப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். பின்னர், பெரிய ஹீரோவாக உருவெடுத்த பிறகு நெஸ்கஃபே விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அஜித்குமாருக்கு மிகப்பெரிய அளவில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலே பங்கேற்பதில்லை. ஏராளமான முதலீடுகள் தேவை என்பதாலே தற்போது தனது ஸ்பான்சர் விளம்பரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்திற்கும் இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அவர் அதிக ஊதியம் கேட்பதாலே இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget