மேலும் அறிய

Aishwarya Rajinikanth: ரஜினி மகள் வீட்டில் தங்கம், வைரம் கொள்ளை போன விவகாரம் - பணிப்பெண் கைது: சிக்கியது எப்படி?

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் மாயமான விவகாரத்தில் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நேற்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் நான் தற்போது போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில்  வசித்து வருகிறேன். 2019 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடந்த நிலையில், அன்றைய நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை லாக்கரில் வைத்து தனியாக பராமரித்து வருகிறேன். கிட்டதட்ட 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளோடு பாரம்பரிய நகைகளும்  அந்த லாக்கரில் இருந்தது. 

இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் உள்ள வீட்டிலும், அதன்பிறகு சிஐடி நகரில் உள்ள தனது கணவரின் வீட்டிலும், பின்னர் போயஸ் கார்டனுக்கு குடியேறிய போதும் 3 வீடுகளிலும் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் செயின்ட்மேரிஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் நான் இருந்தபோது லாக்கர்சாவியை அலமாரியில் தான் வைத்திருப்பேன். இது என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும்.

நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்தனர். இதனிடையே கடந்த மாதம் 10 ஆம் தேதி லாக்கரை திறந்துப் பார்த்தப்போது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தது. பல மதிப்புமிக்க மற்றும் பாரம்பரிய நகைகளை காணவில்லை. இது தொடர்பாக எனது வீட்டில் பணி செய்யும் 3 பேர் மீதும் எனக்கு சந்தேகம் உள்ளது.காவல் துறையினர் விசாரணை நடத்தி எனது நகைகளை மீட்டுத்தர வேண்டும்" என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாக கொண்டு பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது என்றும், இதுவரை 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget