Aishwarya Rajinikanth Next Film: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெக்ஸ்ட் மூவி டைட்டில் வெளியானது... PS2 - ஜெயிலர் படங்களுடன் போட்டியிடுமா?
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிக்கவிற்கும் படத்திற்கு 'லால் சாலம்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களை இயக்குவதில் இறங்கி விட்டார். தான் இயக்கவிருக்கும் தமிழ் திரைப்படத்தில் தனது தந்தை சூப்பர் ஸ்டார் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதனை தொடர்ந்து புதிதாக மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனராக மீண்டும் ஐஸ்வர்யா தனுஷ் :
ஐஸ்வர்யா தனுஷ், 2012ம் ஆண்டு நடிகர் தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான '3' திரைப்படம் மற்றும் கௌதம் கார்த்திக் - பிரியா ஆனந்த் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான 'வை ராஜா வை' என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து ஸ்டண்ட் இயக்குனர்களை மையமாக வைத்து ஒரு டாக்குமெண்டரி படத்தையும் ஸ்டாண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் எ கேர்ள் அமாங் தி ஸ்டார்ஸ் என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியிருந்தார். மேலும் 'ஓ சாத்தி சால்' எனும் ஹிந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாவதாகவும் அறிவித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
Aishwarya Rajinikanth's Next Film
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 4, 2022
Music by AR.Rahman@TheVishnuVishal and #Vikranth
Titled as #LaalSalaam
படத்தின் டைட்டில் வெளியானது :
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் லீட் ரோலில் நடிக்கும் படத்திற்கு 'லால் சலாம்' என பெயரிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். 'லால் சலாம்' திரைப்படம் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
Buzz:
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 4, 2022
Title #LaalSalaam
Direction - Aishwarya Rajinikanth
Starring Vishnu & Vikranth with Cameo from Superstar.
Music - AR Rahman. pic.twitter.com/26qVHxK1Z3
எந்தெந்த படங்களுடன் போட்டி :
கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2021ல் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'லால் சலாம்' திரைப்படம் 'ஜெயிலர்' மற்றும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தோடு மோதுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.