Ajith Kumar : அப்போ லண்டன் இப்போ பாரிஸ்... அஜித்தின் வைரலாகும் வீடியோ!
Ajith Kumar : லண்டலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவர் பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.
Ajith Kumar : நடிகர் அஜித் தற்போது லண்டலில் பைக் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ளார்.
ஏ.கே:
தமிழ் சினிமாவில் தல என் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ரசிகர்கள் அவரை ஏ.கே என அழைக்கின்றனர். ஏ.கேவிற்கு இளம் வயது முதலே ஆட்டோ மொபைல் மீது இருக்கும் அலாதி பிரியத்தை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஏரோனாட்டிக்ஸ் பிரிவு மாணவர்களுக்கு ட்ரோன் வடிவமைப்பது வரையில் அவர் உதவியாக இருந்திருக்கிறார். தீவிர மெக்கானிக்ஸ் பிரியர். அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிவற்றையெல்லாம் தனது ஃபிரீ டைமில் செய்து வந்தவர். தற்போது லண்டலில் அவர் பைக் மூலம் சுற்றுப்பயணத்தை மெற்க்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும். லண்டலில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அவர் பொருட்களை வாங்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.
Thala Latest click 💥😍❤️
— AJITHROMAN TN55 (@ajithroman007) July 12, 2022
#AK61 #AjithKumar #AK pic.twitter.com/aYF9UcQ11W
Charming THALA #AjithKumar 😍😍#AK61 😉😉 Miratal Look 😎 📸💥📸 pic.twitter.com/h7bPZsuWyk
— AJITH ANTONY (@RajAntilraj1991) July 12, 2022
பாரிஸில் அஜித் :
அஜித் தற்போது இதனை தொடர்ந்து அஜித் தற்போது ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஐஃபில் டைவரை பார்வையிட சென்றிருக்கிறார். அங்கே அவரை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் கால்பந்து ஜெர்ஸியில் கையெழுத்து கேட்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே காணலாம் .
Man Of MASS #AK !😎🔥#AK61 pic.twitter.com/HKs1EVHrbO
— 𝑴𝒓.𝑮𝒂𝒏𝒆𝒔𝒉 ✨ (@GaneshAK_FanBoy) July 11, 2022
#AjithKumar greeting each and every fan in Paris.#AK61 pic.twitter.com/6UQ4Qf2VZT
— Manobala Vijayabalan (@ManobalaV) July 11, 2022
அஜித்61 :
அஜித் குமார் அடுத்ததாக எச்.வினோத்தின் இயக்கத்தில் ஏகே61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜீத் குமாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித் நாடு திரும்பியதும் முதற்கட்ட படப்பிடிப்பு புனேவிலும் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் சென்னையிலும் நடைப்பெறும் என தெரிகிறது.