மேலும் அறிய

Keerthy Suresh: திருப்பாச்சி தங்கச்சி ஆகும் கீர்த்தி சுரேஷின் கனவு.... இரண்டாவது முறையாக தங்கை கதாபாத்திரத்தில் தோற்ற கீர்த்தி!

தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘அண்ணாத்த’ படத்தின் தோல்வியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாகவும் தோற்றுள்ளது ‘போலா சங்கர்’ படம்

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்த இரண்டாவது படமும் தோல்வியை சந்தித்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

தமிழ் சினிமாவில் தனது 8 ஆண்டுகளை நிறைவு செய்து கோலோச்சி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் கீர்த்தி.

இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 

நடிகையர் திலகம் சாவித்திரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை திரையுலகமே பார்த்து வியந்தது ‘நடிகையர் திலகம்’ படத்தில் தான். தென்னிந்தியாவின்  நடிகையர் திலகம் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட ‘மகாநடி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது.

தங்கச்சியாக அவதாரம் 

தொடர்ந்து, அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்தார் கீர்த்தி. எப்படியாவது திருப்பாச்சிக்கு நிகரனான ஒரு அண்ணன் - தங்கச்சி செண்டிமெண்ட் படத்தில் நடித்துவிடலாம் என்கிற ஆசை தான். இந்தப் படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுத்தார் கீர்த்தி. ஆனால் அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.

இந்த டைம் மிஸ் ஆகாது

சரி ஒரு முறை தவறிவிட்டது. இந்த முறை எப்படியாவது தங்கச்சியாக நடித்து ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை தங்கையாக நடித்தார் கீர்த்தி. தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் லக்‌ஷ்மி மேனன் நடித்து வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சீரஞ்சீவியின் தங்கையாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது போலா சங்கர் திரைப்படம். இந்நிலையில் வேதாளம் படம் தமிழில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டதை விட அதிகமான தெலுங்கில் விமர்சிக்கப்பட்டு வருகிறது போலோ சங்கர். இரண்டாவது முறையாகவும் தங்கையாக கீர்த்தி நடித்திருக்கும் படம் தோல்வியடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருப்பாச்சி தங்கச்சியாகும் கீர்த்தியின் கனவு நிறைவேறாமலே போய்விடுமோ!

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Embed widget