மேலும் அறிய

Adipurush Release LIVE: 600 கோடி பட்ஜெட்டில் இப்படியா...ரசிகர்கள் அதிருப்தி!

Adipurush Movie Release LIVE Updates: பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் உடன் தேவ்தத்தா நாக் ஹனுமனாக நடித்துள்ளார்.

Key Events
Adipurush Movie Release LIVE Updates Advance Ticket Booking Chennai Tamil Nadu Movie Review Prabhas Kriti Sanon Adipurush Release LIVE: 600 கோடி பட்ஜெட்டில் இப்படியா...ரசிகர்கள் அதிருப்தி!
ஆதிபுருஷ்

Background

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் ராமாயணக் கதையை  அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. நாளை (ஜூன்.16) இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இணையத்தில் ட்ரோல்கள், சர்ச்சைகள் எனக் களைக்கட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்று ட்ரெண்டானது.  இந்நிலையில் சுமார் 500 கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு மேலும் 100 கோடிகள் ஒதுக்கி, படக்குழு முழுவீச்சில் படப்பணிகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மீண்டும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் முன்னதாக திருப்பதியில் நடைபெற்ற ஆதிபுருஷ் ப்ரீ ரிலீஸ் விழாவில் இப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், கடவுள் ஹனுமனுக்கு தியேட்டர்தோறும் ஒரு இருக்கை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது, முழுமையான ட்ரோல் மெட்டீரியலாக மாறி இணையத்தை ஆக்கிரமித்தது.

தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்களுக்கு ஓம் ராவத் கோரிக்கை விடுத்ததை அடுத்து படக்குழுவும் இது தொடர்பான அறிவிப்பைப் பகிர்ந்தது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ஆதிபுருஷ் படத்தின் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.

இதேபோல் நடிகர்கள் ராம்சரண், காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' படங்களில் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால்  ஆகியோரும் இதேபோன்று அறிவித்தனர். இந்நிலையில் படத்தை ஓட வைக்க ஆதிபுருஷ் படக்குழு தொடர்ந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டில் இப்படி டிக்கெட்டுகள் வாங்கித் தர ஒரு ஸ்டார் இல்லையே என்றும் புலம்பி நெட்டிசன்கள் மேலும் இப்படத்தை ட்ரோல் கண்டெண்டாக மாற்றினர்.

மறுபுறம் இப்படத்துக்கு மகாராஷ்டிராவின் பிரபல இரட்டை இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன. 

நடிகர் தேவ்தத்தா நாக் ஹனுமனாக நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்கள் தவிர சன்னி சிங், சோனால் சௌஹான் உள்ளிட்ட நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னதாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது.

முன்னதாக 1992ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய திரைப்படமான ‘ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ்’ படத்தால் ஈர்க்கப்பட்ட  இயக்குநர் ஓம் ராவத், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமாயணம் எடுக்க விரும்பி இப்படத்தை எடுத்துள்ளார். 

நடிகர் பிரபாஸூக்கு முன்னதாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியைத் தழுவிய நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெறுமா என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.

12:55 PM (IST)  •  16 Jun 2023

Adipurush Release LIVE: 600 கோடி பட்ஜெட்டில் இப்படியா...ரசிகர்கள் அதிருப்தி!

இராவணனாக சைஃப் அலி கான் தோன்றும் விஎஃபெக்ஸ் காட்சிகள் சரியில்லை என்றும், 600 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படம் எடுக்கப்பட்டதாக நம்ப முடியவில்லை எனவும் படம் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

12:41 PM (IST)  •  16 Jun 2023

Adipurush Release: பிரபாஸ் ராமராக ஈர்க்கவில்லை... அதிருப்தி தெரிவிக்கும் விமர்சகர்கள்!

ஆதிபுருஷ் படத்தில் ஸ்ரீராமராக பிரபாஸ் ஈர்க்கவில்லை, அவரது ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் சரியில்லை என்றும் பிரபல பாலிவுட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget