மேலும் அறிய

Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

‛என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே, நீங்கள்  உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை,’ என ,தன் மீதான உருவ கேலி குறித்து இளம் நடிகை சனுஷ்கா பதிலளித்துள்ளார்.

2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் காசி. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சனுஷா. இவர் மலையாளத்தில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விக்ரம் படமாக பீமாவில் த்ரிஷாவின் தங்கையாக நடித்தார். பின்னர் ரேணிகுண்டா படத்தில் நடிகையாக கால்பதித்தார் சனுஷா. ஆனாலும் அதற்கு பின் அவருக்கு நாயகியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இளம் வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் துணை கதாபாத்திரங்களே கிடைத்தன.கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராகவும், கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாகவும் நடித்தார். 


Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

பின்னர் கொரோனாவால் சினிமாத்துறையே சத்தமில்லாமல் கிடக்கும் நிலையில் சனுஷாவும் வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டில் இருந்த காலக்கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக இருந்தார் சனுஷா. அவர் இன்ஸ்டாவில் பகிரும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் அவர் உடல் எடை குறித்தும் பேசுவது உண்டு. இந்நிலையில் மீண்டும் ஸ்லிம்மாக மாறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சனுஷா. புகைப்படத்தை மட்டுமல்ல தன்  உடல் எடை குறித்து பேசிய நபர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.

சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?

அதில் ,என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே,நீங்கள்  உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை. எப்பொழுதும் நினைவில் வையுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி இருவிரலை நீட்டினால், வேறு யாராவது உங்களை நோக்கி மூன்று விரல்களை நீட்டுவார்.நீங்களும் மிக நேர்த்தியானவர்கள் இல்லை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். பாடி ஷேமிங் செய்யும் பல நபர்களுக்கு சனுஷ்காவின் பதிவு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

முன்னதாக சனுஷா தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் துயரத்தை கொடுத்தது. வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் கஷ்டங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை அச்சமூட்டின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். பின்னர் என் மீது பாசம் வைத்துள்ள தம்பியை நினைத்து அந்த முடிவை கைவிட்டேன்.பின்னர் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்றார்.

சோஷியல் மீடியாக்களில் நடிகர்களின் போட்டோவுக்கு அநாகரிகமாக கமெண்ட் செய்வதும், அதற்கு குறிப்பிட்ட நடிகர்கள் உடனடியாக நச் பதில் அளிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் கூட நடிகை பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் “ உங்கள் சைஸ் என்ன?” என கேட்க , அதனை ஸ்கிப் செய்யாமல் துணிச்சலாக பதில் அளித்த பார்வதி நாயர், ஷூ சைஸ் 37” என்றும் , ட்ரஸ் சைஸ் "S" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி குவித்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanusha Santhosh💫 (@sanusha_sanuuu)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget