Samantha: சிகிச்சை முடிந்து இன்ஸ்டாவில் மீண்டும் முகம் காட்டிய சமந்தா !
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, யசோதா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சமந்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து நடித்தும் ஹிட் படங்களைக் கொடுத்தும் வருகிறார்.சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.இதைத் தொடர்ந்து யசோதா, சாகுந்தலம், குஷி என பிற திரைப்படங்களின் ரிலீஸ்காகவும் காத்திருக்கிறார்.
மீண்டும் போட்டோஷூட் !
பெரிய திரையில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தாவிற்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 கோடி ஃபாலோவர்களுக்கும் மேல் உள்ளனர்.ஆனால் சில மாதங்களுக்கு முன், நடிகை சமந்தா தனது சொந்த முன்னேற்றத்திற்காக அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறி சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடும் சமந்தா, தற்போது தனது திரைப்படங்களின் போஸ்டர் டிரைலர் ஆகியவற்றை மட்டுமே பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
சமீபத்தில் myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து பிரபலங்கள், சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள், முன்னாள் கணவர் நாக சைதன்யா ஆகியோர் சமந்தாவை நலம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவின் கீழ் என்னுடைய நல்ல நண்பர் ராஜ் எப்போதும் கூறுவார்…''அன்றைய நாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்திருந்தாலும், அவருடைய குறிக்கோள் குளித்து, ஷேவ் செய்து, டிப்டாப்பாக நம்மைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே.. அந்த பொன்மொழியை இன்று ஒரு நாள் யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நான் கடன் வாங்கிக் கொண்டேன் என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா. மேலும் நவம்பர் 11 நான் யசோதா திரைப்படம் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நடிகை சமந்தா உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பது அறியப்படுகிறது.
திரில்லர் திரைப்படம் :
View this post on Instagram
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நவம்பர் 11ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'யசோதா'.