Sivakarthikeyan: ‘சிவகார்த்திகேயனை பாருங்க’ - சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ரம்யாகிருஷ்ணன் அட்வைஸ்
சாதிக்க வேண்டும் என கனவு காணும் ஒவ்வொரு இளைஞனுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று நடிகை ரம்யாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என நடிகை ரம்யா கிருஷ்ணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது மிமிக்கிரி திறமை மூலம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். தன்னுடைய திறமையின் மூலம் மிக விரைவிலேயே மக்கள் மனம் கவர்ந்த தொகுப்பாளராக மாறினார். 2012ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பக் கட்டத்தில் இவரின் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம்கொத்தி பறவை போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை.
2013ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் வரவேற்பை பெற்றது. அதே ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சிவகார்த்திகேயனும் சூரியும் இணைந்து நடித்து காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. தமிழ் சினிமாவில் இவருக்கென ரசிகர்கள் உருவாக தொடங்கியது இந்த படத்திற்கு பிறகு தான்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நடிப்புத்திறமை, நடனம், காமெடி, உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் வல்லவராக இருக்க வேண்டும். சிவகார்த்திகேயன் காமெடியில் அசத்தினார். சிவகார்த்திகேயேன் ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தார். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் 14ம் தேதி ரிலீஸானது. தமிழ், தெலுங்கில் ரிலீஸான இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்த மாவீரன், 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இப்படம் கிட்டதட்ட ரூ.90 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இது அவரின் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு என்கின்றனர் ரசிகர்கள்.
இப்படியான நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சி புகழ்ந்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது “அவரின் வெற்றி இமாலய வெற்றி. வருங்காலத்தில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் ஒவ்வொரு இளைஞனுக்கும் சிவகார்த்திகேயன் ஒரு இன்ஸ்பிரேஷன். இதே போல் வெற்றிகளுடன் அவர் நிறைய நாள் இருக்கணும். என்ன சொன்னாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு செய்வார்.
அவர் ஹீரோ ஆகவில்லை என்றால் நான் என் பெயரை மாற்றிக்கொள்கின்றேன் என்று சொன்னேன். சிவகார்த்திகேயேனை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்”. இவ்வாறு ரம்யாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் படிக்க