Ramya Pandian : யோகா பயிற்சியாளரை திருமணம் செய்யப்போகிறார் ரம்யா பாண்டியன்..திருமண தேதி என்ன தெரியுமா?
Ramya Pandian Marriage : பிக்பாக்ஸ் புகழ் நடிகை ரம்யா பாண்டியன் பிரபல யோகா பயிற்சியாளரை திருமனம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரம்யா பாண்டியன்
தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து மொட்டை மாடியில் இவர் எடுத்த கவர்ச்சிப்படங்கள் இவரை பிரபலமாக்கியது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். அத்துடன் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் இவருக்கு ரசிகர்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தந்தது.
யோகா பயிற்சியாளரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியனின் திருமணம் குறித்த கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. தனது மனதிற்கு பிடித்த ஒருவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் இதுவரை அப்படியான ஒருவரை தான் பார்க்கவில்லை என்றும் அவர் முன்பு தெரிவித்திருந்தார். தற்போது தனது யோகா பயிற்சியாளரான லவல் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர் தான் லவல் தவான். இருவருக்கும் பார்த்த உடனே பிடித்து காதலில் விழுந்ததாகவும் தற்போது தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லவல் தவான் ஒரு பிரபல யோகா பயிற்சியாளர். இது தவிர்த்து ஒரு தொழிலதிபரும் கூட. அதே நேரம் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர் ரம்யா பாணியன்.
#RamyaPandian 's last Diwali 🧨🪔 as single #Loveldawan weds #Ramyapandiyan on November month#SupremeCourt #AmaranAudioLaunch #RocketDriver #INDvNZ #BoodheHokeKyaBanoge #BoodheHokeKyaBanoge #2024BigBillionPropertySale #IMC24 Rachin Ravindra pic.twitter.com/ynh8mZYAOz
— Prasadh M (@prasadh_m) October 18, 2024
வரும் நவம்பர் 8 ஆம் தேதி இருவரும் ரிஷிகேஷில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.