தேர்தல் ஆணையம் பதில் தரலை.. ராகுல் காந்திக்கு முழு ஆதரவு.. குத்து ரம்யா என்ன சொல்றாங்க தெரியுமா?
ராகுலுக்கு ஆதரவாக பிரபல நடிகை குரல் கொடுத்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள் இருந்தது எப்படி, ஜீரோ எண் கொண்ட முகவரியில் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கம் வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணை்ந்து தான் இந்த குற்றத்தை இழைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பிகார் மாநிலத்தில் 16 நாட்கள் வாக்காளர் அதிகார நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். வாக்கு திருட்டு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டாது. ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி கூறிய புகாருக்கும் விளக்கம் அளித்து பேசியிருந்தார். இருப்பினும் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியுள்ளார். தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நகைச்சுவையாக இருக்கிறது. உண்மையான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க மறுப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் போலியான வாக்காளர் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும், அதனை எப்போது நீக்குவார்கள் என்பதற்கும் விளக்கம் தர வேண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை திவ்யா ஸ்பந்தனா கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் சமூகவலைதள பிரிவு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்ததாலும், கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் அந்த பொறுப்பில் இருந்து 2021ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். மேலும் ராகுல் காந்தியும் திவ்யாவும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ராகுல் காந்தி திவ்யாவிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி இருக்கும் திவ்யா தற்போது மீண்டும் குரல் கொடுத்திருப்பதை கர்நாடக மாநிலத்தை கவனிக்க வைத்துள்ளது.






















