மேலும் அறிய

Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார்.

பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம். 

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. கிட்டதட்ட ஒரு வருடமாக தியேட்டரில் வெற்றிகரமாக பருத்தி வீரன் ஓடியது. 

இப்படம் பற்றி ஒரு நேர்காணலில் பிரியாமணி பேசியதாவது, “இந்த மாதிரி ஒரு படம் என் சினிமா கேரியரில் அமைந்தது சந்தோசமாக உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் என்னை பார்ப்பவர்கள் முத்தழகு என்று அழைக்கிறார்கள். இதற்கு நான் அமீருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கிறது. அந்த படத்தில் சரிகமபதநி பாடல் தேனியில் ஷூட் செய்யப்பட்டது. கிட்டதட்ட மதியம் 12 மணி வெயிலில் பாறை மேல் உட்கார வைத்து இன்னைக்கு நாம இந்த சீன் எடுக்கப்போறோம் என சொன்னார்.

நானும் சரி என சொல்லிவிட்டேன். அந்த பாட்டில் இருக்கும் பாட்டிகள் எல்லாம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்கு சென்றவர்களை கூட்டி வந்து தலையை மட்டும் ஆட்டினால் போதும் என சொல்லி நடிக்க வைத்தார். 

என்னுடைய அம்மா வழியில் உள்ளவர்கள் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாகராவில் பாடலை ஓடவிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி நீ தாளம் போடு என சொல்லி விட்டார். அமீர் தான் பாட்டியை கிண்டல் செய்வது உள்ளிட்ட சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த காட்சியில் என் கையில் இருக்கும் குச்சி கூட அந்த பக்கம் கிடந்தது. அதேபோல் ஒரு காட்சியில் கார்த்தி என்னை அடிப்பது போல இருக்கும். அந்த காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது. எடுக்கும்போது மதியம் அதே 12 மணி வெயில். சரியான வெப்பம் நிலவும் நேரத்தில் மதியம் சாப்பாடும் கிடையாது. சாப்பாடு நேரம் என பார்த்தால் நானும் கார்த்தியும் மாலை 4 மணிக்கு தான் சாப்பிட்டோம். 

அந்த இடத்தில் வேறு ஏதோ காட்சி எடுக்கும்போது அமீர் ஒரு பள்ளம் தோண்டி வச்சாரு. அதில் தண்ணியை நிரப்பி இது அப்படியே இருக்கட்டும், மூட வேண்டாம் என விட்டு விட்டார். கிட்டதட்ட ஒருவாரம் அந்த குழியில் குப்பை, பூச்சிகள் என எல்லாம் இருந்தது. என்னிடம் வந்து கார்த்தி அடிப்பான், நீ விழணும் என சொன்னார். நான் நிஜமாகவே அடி வாங்குனேன். இந்த படத்துக்கு டப்பிங் பேசும் போது அமீர் தான் சொல்லி கொடுத்தார். ஆனால் கிளைமேக்ஸ் சீன் டப்பிங் பேச என்னால் முடியவில்லை. அந்த காட்சியை பார்த்து பார்த்து 4 நாட்கள் அழுதேன். அது படத்துக்கான எடிட் கிடையாது. அது ரஃப் எடிட் காட்சிக்கே நான் அப்படி அழுதேன். கடைசியில் அம்மாவும், அமீரும் தான் வேறு வழியில்லை. பண்ணிதான் ஆக வேண்டும். நேரம் வீணாக்க வேண்டாம் என சொல்லியதால் டப்பிங் பேசி முடித்தேன்” என பிரியாமணி கூறியிருந்தார்.  

தலைப்பு செய்திகள்

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Iran Vs America: அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
அந்த பயம் இருக்கட்டும்.! ஏவுகணை சோதனை செய்த ஈரான்; தெறித்து ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.!
Trump Vs Iran: ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
'Trump Strait': இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
Embed widget