‛எல்லை மீறும் பூனம் பாஜ்வா...’ அடுத்தடுத்து களமிறங்கும் நீச்சல் உடை போட்டோக்கள்!
இளம் இயக்குனர்களை தன் பக்கம் திருப்பும் விதமாக பூனம் பாஜ்வா கையில் எடுத்துள்ள இந்த முயற்சி, அவருக்கு பயனளிக்கிறதோ இல்லையோ, அவரை பின்தொடர்வோருக்கு பெரும் விருந்தாக இருந்து வருகிறது.
2005 ம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெலுங்கு, கன்னடா என தென்மாநில மொழிகளில் களமிறங்கிய பூனம் பாஜ்வா, 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என பரத், ஜீவா போன்ற இளம் கதாநாயகர்களுடன் களமிறங்கிய பூனம் பாஜ்வாவிற்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.
2011ல் மலையாளத்திற்கு சென்றும், அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக மாறமுடியவில்லை. ஆனாலும் மலையாளம், கனடம் என இரு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பின் 2015ல் ஆம்பள படத்தில் தமிழில் மீண்டும் எண்ட்ரி ஆனார். அதே ஆண்டில் ரோமியோ ஜூலியட், அதன் பின் 2016ல் அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் படங்களில் நடித்தார்.
View this post on Instagram
அதன் பின், பூனம் பாஜ்வாவின் தமிழ் கதவுகள், திடமாக சாத்தப்பட்டது. அதன் பிறகும் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், 2019ல் குப்பத்துராஜா என்கிற தமிழ் படத்தில் தோன்றினார். அதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் தமிழில் தனது கனவு கன்னி கனவு பறிபோன விரக்தியில் இருந்தார் பூனம் பாஜ்வா. காத்திருந்து காந்திருந்து காலங்கள் போனதடி என்பதைப் போல, பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளும் பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பூனம், தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடத் தொடங்கினார். கவர்ச்சி என்றால், அது எல்லை மீறிய கவர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
View this post on Instagram
இன்றைய இளம் இயக்குனர்களை தன் பக்கம் திருப்பும் விதமாக பூனம் பாஜ்வா கையில் எடுத்துள்ள இந்த முயற்சி, அவருக்கு பயனளிக்கிறதோ இல்லையோ, அவரை பின்தொடர்வோருக்கு பெரும் விருந்தாக இருந்து வருகிறது. சமீபவத்தில் அவரது நீச்சல் உடை போட்டோக்கள் நீச்சல் குளத்தையே சூடாக்கி வருகின்றன. பாஜ்வாவின் பகல் கனவு நிறைவேறுமா என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.