மேலும் அறிய

Niharika Konidela: விவாகரத்து பெற்றதால் அவமானப்பட்டேன்.. விஜய்சேதுபதி பட நடிகை ஆதங்கம்!

என்னை விமர்சித்தவர்கள் என் குணத்தை தவறாக பேசினார்கள். என் குடும்பத்தை அவதூறாக பேசினார்கள் என விஜய் சேதுபதி பட நடிகையான நிஹாரிகா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எனக்கு விவகாரத்தான சமயத்தில் என் கேரக்டரை தரக்குறைவாக பேசியதால் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை நிஹாரிகா கொனிடேலா தெரிவித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபு சினிமாவில் நடிகராக திகழ்கிறார். இவரது மகளான நிஹாரிகா சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். 

குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமான நிஹாரிகா சினிமாவில் தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களை கவர்ந்தார். தொடர்ச்சியாக அவர் படம் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் தயாரிப்பாளராகவும் அவர் களம் கண்டார். இந்த நிலையில் தான் 2020ம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தின் ஐஜி மகனான சைதன்யாவுடன் நிஹாரிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மிகப்பெரும் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஆனால் 2023ம் ஆண்டு இந்த தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வது பற்றி ஆலோசித்து முடிவெடுத்தனர். நிஹாரிகாவின் விவாகரத்து பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் அதைப் பற்றி பெரிதும் கவனத்தில் கொள்ளாத அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசினார். 

அதில், “ எங்களுடையது நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு விவாகரத்து கிடைத்தபோது பலர் பலவிதமாகப் பேசினர். திருமணத்திற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும்.  விவாகரத்து பெற்று விட்டேன் என தெரிந்த பிறகு என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வெளியானது. அதேபோல் பைத்தியக்காரத்தனமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டது. 

என்னை விமர்சித்தவர்கள் என் குணத்தை தவறாக பேசினார்கள். என் குடும்பத்தை அவதூறாக பேசினார்கள். திருமணம் என்பது ஒரு சிறிய சாதாரண விஷயம் கிடையாது. இவ்வளவு பணம் செலவழித்து விட்டு பிரிந்து செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள். அதேசமயம் திருமணம் செய்துக் கொள்ள நினைப்பவர்கள் அதற்கு முன் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது மிக முக்கியம். திருமணம் முடிந்த பிறகு என்னுடைய சூழ்நிலைகள் மாறியது. விவாகரத்து பெறலாம் என நினைக்கும்போது என் குடும்பத்தினர் ஆதரவளித்தனர். குறிப்பாக என் தந்தை மிக உறுதுணையாக இருந்தார். அதுதான் நான் மன வலிமையுடன் இருக்க காரணமாக அமைந்தது. விவாகரத்து கிடைத்தபோது நான் நிறைய அழுதேன். அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினமாக இருந்தது. சொல்லப்போனால் அது எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. யாரையும் எளிதில் நம்பக்கூடாது என கற்றுக் கொண்டேன் என நிஹாரிகா கூறியுள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Embed widget