தமிழில் இத்தனை ஆண்டுகள் நஸ்ரியா நடிக்காதது ஏன்? சூர்யா படத்தால் ரீ என்ட்ரி தருவது ஏன்?
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட நஸ்ரியா, மீண்டும் பிருத்விராஜ் நடித்த கூடே என்ற மலையாள படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
2013ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த நையாண்டி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிய நஸ்ரியா 10 ஆண்டுகளுக்கு மீண்டும் பெண் இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ரீ என்ட்ரி கொடு்த நஸ்ரியா:
தமிழில் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறினார். இதில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் கியூட்டாக நடித்திருந்த நஸ்ரியா ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய நஸ்ரியா, திடீரென ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட நஸ்ரியா, மீண்டும் பிருத்விராஜ் நடித்த கூடே என்ற மலையாள படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், தமிழில் நடிக்காமல் இருந்த நிலையில், அஜித்தின் படத்திலும் நடிக்க ஒப்புதல் அளித்து பின்னர் விலகியதாக தகவல்கள் வெளியாகின.
விலகியதன் காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் இருந்து நஸ்ரியா விலகி இருக்க அவர் நடித்த நையாண்டி படமே காரணம் என கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் நடித்த நையாண்டி படத்தை களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தனது அனுமதி இல்லாமல் தனக்கான டூப் போடப்பட்டதாகவும், அந்த காட்சியில் தனக்கு நடிக்க அசவுகரியமாக இருக்கும் என்பதால் நடிக்க மாட்டேன் என முதலில் கூறியதாகவும், ஆனால், அதை கேட்காமல் படத்தின் இயக்குநர் சற்குணம் டூப் போட்டுள்ளதாகவும் கூறி நஸ்ரியா புகார் அளித்திருந்தார்.
புறநானூறு மூலம் கம்பேக்:
இந்த பிரச்சனையால் தமிழ் சினிமாவில் இருந்து நடிக்காமல் இருந்த நஸ்ரியா 10 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொஞ்கரா இயக்கும் புறநானூறு என டைட்டில் வைத்துள்ள படத்தின் அறிவிப்பு இன்று வெளியுள்ளது. அதில், சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா மற்றும் துல்கர் சல்மான் நடிக்கப்பதாக டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளதால் நஸ்ரியா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக தமிழ் பக்கம் திரும்பாத நஸ்ரியா சுதா கொங்கரா பெண் இயக்குநர் என்பதால் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.