Watch Video: காத்துவாக்குல ரெண்டு காதல்: நாளை வெளியாகும் பாடலுக்கு டீசர் வெளியிட்ட நயன்தாரா...!
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் நான் பிழை என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தப் பாடலின் டீசரை தற்போது நடிகை நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தப் பாடலின் சில வரிகள் வருகின்றன. அத்துடன் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருப்பது போல் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த முழு பாடல் நாளை வெளியாக உள்ளதால் இந்த டீசர் வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Small teaser for you all 🎶 🎵 #NaanPizhai from tomorrow full song 🎶🎵🎥 pic.twitter.com/NVECXxXMmy
— Nayanthara✨ (@NayantharaU) January 2, 2022
முன்னதாக இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்ததாக தகவல் வெளியானது. அந்த தகவலும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹர்பஜன் சிங், பிராவோ உள்ளிட்டோரும் திரையில் தோன்றியுள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் நான்காவது கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Sreesanth the cricketer is all set to open his innings in #Kollywood! @sreesanth36 is going to play a “pivotal role”in @VigneshShivN’s #KaathuVaakulaRenduKaadhal
— Sreedhar Pillai (@sri50) December 18, 2021
along with @VijaySethuOffl, #Nayanthara & @Samanthaprabhu2 pic.twitter.com/FUAoPZN9TO
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்