மேலும் அறிய

Meera Mithun: மீரா மிதுன் ஆஜராக சம்மன்: விரைவில் கைதாக வாய்ப்பு என போலீஸ் வட்டாரத்தில் தகவல்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மீரா மிதுனை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அவர் கைதாக வாய்ப்புள்ளது. 

நடிகை மீராமிதுன் அண்மையில் வெளியிட்ட காணொலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர்களையும், பட்டியல் சாதியினரையும் குற்றவாளிகள், திருடர்கள் எனக் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் வசிக்கக்கூடிய கோடிக்கணக்கான பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக, சமூக பதற்றத்தை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார்.

நடிகை மீராமிதுன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

Meera Mithun: மீரா மிதுன் ஆஜராக சம்மன்: விரைவில் கைதாக வாய்ப்பு என போலீஸ் வட்டாரத்தில் தகவல்!

இதையடுத்து, அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். மேலும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்தன. இதற்கிடையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது.

Meera Mithun: மீரா மிதுன் ஆஜராக சம்மன்: விரைவில் கைதாக வாய்ப்பு என போலீஸ் வட்டாரத்தில் தகவல்!

மீரா மிதுன் எப்போது கைது செய்யப்படலாம் என்றும், அதற்காக அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என பரவலாக பேச்சு இருந்தது. அதன் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மீரா மிதுனை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அவர் கைதாக வாய்ப்புள்ளது. 

நடிகை மீரா மிதுன் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். முன்னதாக, தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு சர்ச்சைகளுக்குரிய கருத்துக்களை தெரிவித்து தமிழ்நாட்டில் பிரபலமானார்.

மேலும், நடிகர் சூர்யா, நடிகர் விஜய், நடிகை ஜோதிகா உள்பட பலரையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து, சமூக வலைதளங்களில் அவர்களின் ரசிகர்களின் கடுமையான கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகைகள் நயன்தாரா, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் தன்னை போன்றே மேக்கப் செய்து கொள்வதாக கூறியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget