Rajinikanth : ஸ்பாட்டில் மாஸ் காட்டும் ரஜினி...மஞ்சு வாரியர் பகிர்ந்த பி.டி.எஸ் வீடியோ
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வேட்டையன் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக நிலைத்திருப்பவர் ரஜினிகாந்த். இன்று அவர் தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிக்கு தமிழ் முதல் இந்தி திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிக்கு பா ரஞ்சித் வாழ்த்து
ரஜினியுடன் கபாலி , காலா ஆகிய இரு படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Happy birthday ❤️❤️❤️❤️❤️ our #Superstar 💥💥💥 pic.twitter.com/iDSbSwu1Fn
— pa.ranjith (@beemji) December 12, 2024
தனுஷ்
நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy birthday to the one, only one, super one .. SUPERSTAR .. the phenomenon that redefined mass and style .. my thalaiva 🙏🙏🙏 @rajinikanth sir ❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 12, 2024
தவெக தலைவர் விஜய் வாழ்த்து
தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் நடிகர் விஜய் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என விஜய் பதிவிட்டுள்ளார்.
வேட்டையன் பி.டி.எஸ் வீடியோ பகிர்ந்த மஞ்சு வாரியர்
ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் ரஜினியின் வீடியோ ஒன்றை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி நாற்காலியில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் வீடியோவை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
கூலி அப்டேட்
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூலி படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெல்சன் திலிப்குமார் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது