Khushboo with M S Dhoni: கேப்டன் கூலும் நானும்... போட்டோ பகிர்ந்த குஷ்பு.. முத்தம் கொடுத்த சுந்தர்.சி அம்மா!
”என் 88 வயது மாமியாரை தோனி சந்தித்தார். மஹி, நீங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அவருடைய வாழ்க்கையில் சேர்த்திருக்கிறீர்கள்” என குஷ்பு பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியை சந்தித்து போட்டோ பகிர்ந்துள்ளார்.
80கள் தொடங்கி தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்பு, இன்றும் லைம்லைட்டில் இருக்கும் ஒரு நபராக விளங்கி தொடர்ந்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.
தற்போது அரசியல், சினிமா என இரண்டிலும் கலக்கி வரும் குஷ்பு மற்றொருபுறம் சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக விளங்கி வருகிறார். தன் தினசரி வாழ்க்கை நிகழ்வுகள், குடும்பப் புகைப்படங்கள் என தொடர்ந்து பகிர்ந்து வரும் குஷ்பு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.
அந்த வகையில், தற்போது குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் கூல் தோனியுடன் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள குஷ்பு, “ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். அதை தோனி நிரூபித்துள்ளார். அவர் என் 88 வயது மாமியாரை சந்தித்தார், மஹி, நீங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அவருடைய வாழ்க்கையில் சேர்த்திருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு என் நன்றி. சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விசில் போடு” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் தன் மாமியார் தோனிக்கு முத்தமிடும் போட்டோ, தான் தோனியுடன் இருக்கும் போட்டோ ஆகியவற்றையும் குஷ்பு பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் (ஏப்ரல்.12) நடைபெற்ற ஐபில் போட்டியைப் பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானம் வந்த நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
சேப்பாக்கத்துக்கு வருகை தந்த குந்தவை பிராட்டி, லியோ என்றாலும் சிங்கம், சென்னை சூப்பர் கிங்ஸூம் சிங்கம் என விதவிதமான கேப்ஷன்களுடன் த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.
மேலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷூம் த்ரிஷாவுடன் மைதானத்தில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்திருந்தார். இதே போல் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
மேலும் படிக்க: Jason Roy: ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இனி இவர்தான்..! இங்கிலாந்தின் அதிரடி மன்னனை தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!