Shaakuntalam: கே.ஆர். விஜயா, சரோஜா தேவி வரிசையில் சமந்தா... அன்று முதல் இன்று வரை சகுந்தலா கேரக்டரில் அசத்திய பிரபலங்கள்..!
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, கே.ஆர். விஜயா, சரோஜா தேவி, ஜெய பிரதா உள்ளிட்ட பழம்பெரும் நடிகைகள் சகுந்தலாவாக நடித்த பட்டியலில் சாகுந்தலம் படம் மூலம் இணைந்துள்ளார் நடிகை சமந்தா.
![Shaakuntalam: கே.ஆர். விஜயா, சரோஜா தேவி வரிசையில் சமந்தா... அன்று முதல் இன்று வரை சகுந்தலா கேரக்டரில் அசத்திய பிரபலங்கள்..! Samantha playing the role sakunthala in Sakunthalam movie is joining the list of Veteran actresses K.R. Vijaya, Saroja devi, jayapradha Shaakuntalam: கே.ஆர். விஜயா, சரோஜா தேவி வரிசையில் சமந்தா... அன்று முதல் இன்று வரை சகுந்தலா கேரக்டரில் அசத்திய பிரபலங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/494389d9440c26edec5a16d2322dd3581681385443773224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குனரான குணசேகர் இயக்கத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும் , நடிகை சமந்தா சகுந்தலாவாகவும் நடித்துள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக வெளியாக உள்ள இப்படத்தில் மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகாபாரத இதிகாசத்தில் இடம் பெற்ற இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சாபம் பெரும் சகுந்தலா :
மகாபாரதத்தின் முதல் அத்தியாயத்தில் முனிவர் விஸ்வாமித்ரர் - அப்சரா மேனகாவின் மகளாக பிறந்து முனிவர் கன்வாவால் வளர்க்கப்படுபவள் சாகுந்தலம். துஷ்யந்தன் என்ற அரசனை திருமணம் செய்து கொள்கிறாள். கணவரை விட்டு பிரிந்து இருக்கும் சமயத்தில் வேறு ஒரு முனிவரால் சபிக்கப்படுகிறாள். உனது கணவர் உன்னைப் பற்றிய அனைத்து நினைவுகளையும் இழப்பார் என சகுந்தலாவிற்கு சாபம் கொடுக்கிறார் அந்த முனிவர். இந்த சாபத்தில் இருந்து மீண்டு சகுந்தலா தனது கணவன் துஷ்யந்தனுடன் சேர்கிறாளா என்பது தான் படத்தின் திரைக்கதை.
சகுந்தலாவின் கதை பல தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் வெளியாகியுள்ளன. அதில் சகுந்தலாவாக நடித்த நடிகைகளை பற்றின பட்டியல் இதோ :
1920 (இந்தி) - சுசேத் சிங் இயக்கத்தில் சகுந்தலாவாக நடித்தவர் டோரதி கிங்டன்
1932 (தெலுங்கு) - சர்வோத்தம் பாதாமியின் இயக்கத்தில் நடிகை கமலாபாய்
1940 (தமிழ்) - எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி
1943 (இந்தி) - வி சாந்தராமன் இயக்கத்தில் ஜெயஸ்ரீ
1961 (இந்தி) - வி சாந்தராமின் இயக்கத்தில் சந்தியா
1965 (மலையாளம்) - குஞ்சாக்கோ இயக்கத்தில் கே.ஆர். விஜயா
1966 (தெலுங்கு) -கமலாகர காமேஸ்வர ராவ் இயக்கத்தில் சரோஜா தேவி
1983 (கன்னடம்) - ரேணுகா ஷர்மாவின் கவிரத்ன காளிதாசா படத்தில் சகுந்தலவாக ஜெயப்பிரதா.
சகுந்தலாவாக இந்த பழம்பெரும் நடிகைகளின் பட்டியலில் 2023ம் ஆண்டில் ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகும் சாகுந்தலம் படத்தில் சகுந்தலாவாக இணைக்கிறார் நடிகை சமந்தா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)