Kajal Aggarwal: ''அப்பாவின் ட்யூட்டி இது''.. கணவனைக் குறிப்பிட்டு காஜல் பதிவிட்ட குழந்தையின் புகைப்படம்!!
அன்னையர் தினத்தன்று காஜல் அகர்வால் தன் மகனை நெஞ்சோடு அனைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடியான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு, தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. கெளதம்- காஜல் அகர்வால் தனது மகனுக்கு நீல் கிச்சலு என்று பெயரிட்டனர். கடந்த அன்னையர் தினத்தன்று காஜல் அகர்வால் தன் மகனை நெஞ்சோடு அனைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டுமொரு போஸ்டை பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால். இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்திருந்த காஜல், மகன் நீல் கிச்சலுவை காஜலின் கணவர் கவுதம் நெஞ்சில் தாங்கிக்கொண்டு உறங்க வைத்துள்ளார். அந்தக்குழந்தையும் க்யூட்டாக அப்பாவின் நெஞ்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப்புகைப்படத்தின் கீழ் 'அப்பாவின் ட்யூட்டி' என பதிவிட்டுள்ளார் காஜல்.
View this post on Instagram
முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தின வாழ்த்துச் செய்தியைக் குறிப்பிட்ட காஜல்,
''அன்பே நீல், நீ எனக்கு எவ்வளவு முக்கியம், நீ என் வாழ்வின் வசந்தம் என்பதை அறிய வேண்டும் என விரும்புகிறேன். என் வாழ்வில் முதன்முதலாக உன்னை என் தோளில் சாய்தபோதும்,உன் சின்னஞ்சிறு கைகளை என் கைகளுக்குள் ஏந்தியபோதும், உன் அழகிய கண்கள், உன் சுவாசக் காற்றை உணர்கையில், நான் எப்போதும் காதலின் கதகதப்பில் இருக்கப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். நி என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் எல்லாமும் நீ. உனக்கு சிறந்த முறையில் எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்க முயற்சிப்பேன்.ஆனால். உன் வருகையில் மூலம் எனக்கு எல்லையில்லாவற்றை சொல்லிக்கொடுத்துவிட்டாய் நீ. தாய்மையின் உணர்வை நீதான் எனக்கு உணர்த்தினாய். எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதை நீதான் கற்றுத்தந்தாய். என் உடலின் வெளியே என் இதயம் இருக்கும் என்பதையும் நீதான் என உணர்த்தினாய்.
View this post on Instagram
தாய்மை சற்று பயமனா பயணம்தான். ஆனால், அழகானது. நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியுடன் வளர வேண்டும். இந்த உலகம் உன்னால் எதுவும் முடியாது என்று சொல்லும் வார்த்தை உன்னை பாதிக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.